சென்னை: தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் வீரியம் குறைந்ததாகத்தான் இருக்கிறது. இருப்பினும், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழை சென்னை முழுவதும் பெய்யாது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் தனது x பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, "சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர்ந்து 9வது நாளாக மழை பெய்து வருகிறது.
பகல் நேரங்களில் வெயில் மண்டையை பொளந்தாலும், கடல் காற்று காரணமாக மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யும். இந்த வானிலை மாற்றம் 9வது நாளாக நீடித்து வருவதால் இன்றும் மழை பெய்யும். மாலை நேர மழையை தொடர்ந்து, இரவு நேரத்திலும் இன்னொரு ரவுண்டுக்கு மழை இருக்கும். எனவே இன்னைக்கு உங்க ஏரியாவில் மழை பெய்யவில்லை எனில் கவலை வேண்டாம், நாளை நிச்சயம் பெய்யும். இடியுடன் கூடிய மழையை பொறுத்தவரை.. ஒரு சில இடங்களில் நல்ல மழை பெய்யும். ஆனால் சில கி.மீ தள்ளி இருக்கும் பக்கத்து ஏரியாவில் மழை இருக்காது. எனவே மாலை நேர மழைக்கு ரெடியாக இருங்க.. நைட்டும் ஒரு ரவுண்டு மழை இருக்கும். வெளியில் செல்பவர்கள் குடையை வைத்துக்கொள்ள வேண்டும்" என்று கூறியிருக்கிறார். முன்னதாக இன்று மதியம் வெளியாகியிருந்த வானிலை அறிவிப்பில், "சுமார் 5.8 கிமீ உயரத்தில் வட கடலோர தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. எனவே, 09-08-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும், ஏனைய தமிழகம், மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 10-08-2026 தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 11-08-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 12-08-2026 மற்றும் 13-08-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும், ஏனைய தமிழகம், மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 14-08-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 15-08-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இன்று (09-08-2026) மற்றும் நாளை (10-08-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.வெதர்மேன் ட்வீட்
சென்னை மழை
வானிலை அறிவிப்பு
அடுத்த ஒரு வாரத்திற்கான வானிலை
சென்னை வானிலை