பேய் மழை வெளுத்து வாங்க போகுது.. தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று டமால் டுமீல் தான்! மெட் அப்டேட்!

  • சென்னை: தமிழகத்தில் மீண்டும் மழை தீவிரமடையும் சூழல் உருவாகியுள்ளது. தென்கிழக்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, மாநிலத்தின் பல மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    Advertisement

    இன்று குறிப்பாக 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது.

    Advertisement

    மேற்கு மற்றும் வடமேற்கு மாவட்டங்களில் தொடர்ந்து மேகமூட்டத்துடன் கூடிய சூழல் நிலவுவதால், பல இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பதிவாகலாம் என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் விவசாயிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நாளை மேலும் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    அதேபோல் நாளை மறுநாளும் இதே மாவட்டங்களில் பரவலாக மழை நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை தீவிரம் அதிகரிக்கலாம் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

    வரும் 26ஆம் தேதி கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது என்றும், இயல்பான அளவிலேயே வெப்பம் நீடிக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    Advertisement

    தொடர்ந்து மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதால், மலைப்பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கவனமாக இருக்குமாறும், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    English Summary

    Chennai Meteorological Centre warns of heavy rain in 10 Tamil Nadu districts due to atmospheric circulation over Bay of Bengal.