Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?

  • சென்னை: கோவை, திருப்பூர், திருச்சி, ஈரோடு, சேலம், விழுப்புரம் உட்பட 17 மாவட்டங்களில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    Advertisement

    தமிழகத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை 8:30 மணியுடன் நிறைவுபெற்ற 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக கிருஷ்ணகிரியில் 8 செ.மீ மழை பதிவானது. தற்போது மத்திய மேற்கு, தென்மேற்கு மற்றும் குமரிக்கடல் வழியாக காற்றழுத்த தாழ்வுப்பாதை நிலவுகிறது. சுமார் 5.8 கிமீ உயரத்தில் மத்திய கிழக்கு வங்கக்கடல் முதல் லட்சததீவு வரை மத்திய மேற்கு, தென்மேற்கு மற்றும் குமரிக் கடல் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வுப்பாதை நிலவுகிறது.

    Advertisement

    அதேபோல், வளி மண்டலத்தில் மத்திய கிழக்கு மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும், தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், ஜூன் 3 ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    மேலும், ஜூன் 3 ஆம் தேதி வரை நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், திருச்சி, நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்பும் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

    Advertisement

    வெப்பநிலையை பொறுத்தவரையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை, 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகம் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    01-06-2026: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 'இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

    Advertisement

    01-06-2026 : தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 'இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

    சென்னைக்கான வானிலை முன்னறிவிப்பு

    சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாயப்புளளது. அதிகபட்ச வெப்பநிலை 38-37 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-25" செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.

    Advertisement

    மீனவர்களுக்கான எச்சரிக்கை

    தமிழக கடலோரப்பகுதிகள்:

    31-05-2026 முதல் 03-06-2026: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    வங்கக்கடல் பகுதிகள்:

    31-05-2026 முதல் 03-06-2026 வரை: அந்தமான் கடல் பகுதிகள், ஆந்திர கடலோரப்பகுதிகள், தெற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்..

    அரபிக்கடல் பகுதிகள்:

    31-05-2026 முதல் 01-06-2026 வரை: கேரள கடலோரப்பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல்

    பகுதிகள், லட்சததீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என சென்னை மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    English Summary

    The Meteorological Department has stated that heavy rainfall is likely in 17 districts-including Coimbatore, Tiruppur, Trichy, Erode, Salem, and Villupuram-for three days starting today.