சென்னை: தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை கோவை, குமரி, நெல்லை, தென்காசி, திருச்சி, வேலூர் என 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. குறிப்பாக திண்டுக்கல், சிவகங்கை, மதுரையில் இடி, மின்னலோடு கனமழை பெய்யும் என ஆரஞ்சு நிற எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த வாரத்திற்குள் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கு ஏற்ப தற்போதே தமிழகத்தில் மழை பெய்ய தொடங்கியுள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை கொட்டி வருகிறது.
தென் மாவட்டங்கள், டெல்டாவிலும் மழை பெய்து வருகிறது. மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பகல் நேரங்களில் வெயில் அடித்தாலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இன்றும் தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. தென்காசி, நெல்லை, தூத்துக்குடியில் இன்று பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், கடையம், பொட்டல்புதூர், ஆழ்வார்குறிச்சி பகுதிகளில் பிற்பகல் 4 மணியளவில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் இன்று இரவு 10 மணி வரை தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கும், 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இது குறித்த அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- திண்டுக்கல், சிவகங்கை, மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்படுகிறது. இதே போன்று கோவை, குமரி, கரூர், நாமக்கல், புதுக்கோட்டை, தென்காசி, தேனி, நீலகிரி, திருச்சி, நெல்லை, வேலூர், விருதுநகர் ஆகிய 12 மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. எனவே குறிப்பிட்ட இந்த நேரத்தில் வெளியில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல அறிவுறுத்தப்படுகின்றன. தாழ்வான சாலைகளில் தண்ணீர் தேங்க வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.தென்மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய கனமழை
Orange alert: கனமழை ஆட்டம் ஆரம்பம்.. இன்று 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! தமிழகம் முழுக்க விட்டு விளாசப் போகுது
3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
Heavy Rain: ஆரம்பித்தது மழை! தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை விடாது.. சென்னையிலும் கொட்டும்! ஐஎம்டி