திடீரென இரவில் குளிர்வித்த மழை.. சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை!

  • சென்னை: சென்னையின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தாம்பரம், பல்லாவரம், மடிப்பாக்கம், வடபழனி, கோடம்பாக்கம், மாம்பலம், எழும்பூர், மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, மெரினா கடற்கரை உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    Advertisement

    கடந்த சில நாட்களாகவே வெப்பம் வாட்டி வதைத்த நிலையில், குளிர்ச்சியான மழைப்பொழிவால் சென்னை வாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Advertisement

    தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் நாளை ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இன்று இரவு 10 மணிக்குள் தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், புதுக்கோட்டை, சென்னை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அந்தவகையில், பெரும்பாலான இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது.சென்னையின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தாம்பரம், பல்லாவரம், மடிப்பாக்கம், வடபழனி, கோடம்பாக்கம், மாம்பலம், எழும்பூர், மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, மெரினா கடற்கரை உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    English Summary

    Widespread rain is occurring across many parts of Chennai. Rain is falling in various areas of the city, including Tambaram, Pallavaram, Madippakkam, Vadapalani, Kodambakkam, Mambalam, Egmore, Mylapore, Nungambakkam, Chetpet, and Marina Beach.