கோவை டூ குமரி வரை.. இன்று 10 மாவட்டங்களில் விட்டு விளாச போகுது கனமழை.. சென்னைக்கும் அலர்ட்

  • சென்னை: தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, தென்காசி, நெல்லை, குமரி, சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. நேற்று இரவு முதலே தென் மற்றும் மேற்கு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்து வரும் நிலையில், சென்னையிலும் இன்று ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நேற்று முன் தினம் முதலே தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்யத் தொடங்கியது. நேற்றும் தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் கனமழை விட்டு விளாசியது. கோவை, தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மழை கொட்டியது. இதனால் இன்று பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் சிரமமடைந்துள்ளனர். பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுமா எனவும் எதிர்பார்த்தனர். இன்றும் 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையினை வானிலை மையம் விடுத்துள்ளது. இது குறித்து வானிலை மையம் கூறியிருப்பதாவது:-

    Advertisement

    இன்று எங்கெல்லாம் கனமழை கொட்டும்

    இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம் மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.

    நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, கன்னியாகுமரி, நீலகிரி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர், தென்காசி, திருப்பூர், திண்டுக்கல், திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.

    Advertisement

    13 ஆம் தேதி வரை மழை விடாது

    வரும் 10 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழையும் பெய்யக்கூடும்

    வரும் 11 ஆம் தேதி, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, தேனி மாவட்டங்கள் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மற்றும் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேசுத்தில்) கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.

    Advertisement

    12-06-2026: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 13-06-2026: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு

    சென்னையில் இன்று (08-06-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 39-40° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது.

    English Summary

    Heavy Rain: The Meteorological Department has forecast heavy rainfall in 10 districts of Tamil Nadu today, including Coimbatore, Tirunelveli and Kanyakumari. Thunderstorms have already begun in several southern districts, while Chennai is expected to receive light to moderate showers.