தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று கனமழை.. வானிலை மையம் கொடுத்த ஜில் அப்டேட்

  • சென்னை: தமிழகத்தில் ஈரோடு, நாமக்கல், மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் இன்று (செப்டம்பர் 29) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    Advertisement

    இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: வடக்கு உள் கா்நாடகம் முதல் தமிழகம் வரை தெற்கு உள் கா்நாடகம் வழியாக சுமாா் 0.9 கி.மீ. உயரத்தில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (செப்டம்பர் 29) ஈரோடு, நாமக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

    Advertisement

    மிதமான மழை

    மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கரூா், திருச்சி, அரியலூா், பெரம்பலூா், திண்டுக்கல், விருதுநகா், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கும், இதர தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

    நாளை எங்கெங்கு மழை பெய்யும்

    நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கும், மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, நாமக்கல், கரூா், திருச்சி, அரியலூா், பெரம்பலூா், திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் நாளை (செப்டம்பர் 30) மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது. இதர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளது.

    Advertisement

    சென்னை வானிலை

    சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் இன்று (செப்டம்பர் 29) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (செப்டம்பர் 29), நாளை (செப்டம்பர் 30) அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக் கூடும்.

    வெப்பநிலை

    தமிழகத்தில் அதிகபட்சமாக பாளையங்கோட்டை பகுதியில் 101.48 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. கரூா் பரமத்தி - 100.76, மதுரை விமான நிலையம் - 100.58, தஞ்சாவூா், ஈரோடு தலா 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

    Advertisement

    மீனவர்களுக்கு எச்சரிக்கை

    மத்திய கிழக்கு வங்கக் கடலின் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப்.29), புதன்கிழமை (செப்.30) சூறாவளிக்காற்று 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    Heavy rain with thunder and strong winds is likely in parts of Erode, Namakkal and Madurai today, while Chennai may receive moderate rain in some areas.