சென்னை: தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி, விருதுநகர், மதுரை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், திருச்சி அரியலூர் உள்பட 23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Advertisement
நாளை தீபாவளி அன்றும் தஞ்சை, திருவாரூர், தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இடி, மின்னலோடு கனமழை கொட்டும் என வானிலை மையம் கணித்துள்ளது. சென்னையில் இன்று மற்றும் நாளை ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
Advertisement