சென்னை: தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இன்று, ஈரோடு, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, நாமக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கும், நாளை ஈரோடு, நீலகிரி உள்பட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னையில் இன்றும், நாளையும் இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் சற்று வெப்பம் தணிந்தது. ஆனால் மீண்டும் வெயில் வெளுக்க தொடங்கியுள்ளது. கடந்த 3 நாட்களாகவே தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் வரும் 1 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று மட்டும் ஈரோடு, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, மதுரை, நாமக்கல், திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்கள் புதுவையில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். காற்றும் பலமாக வீசும். வரும் 1 ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள் மற்றும் கோவை, நீலகியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் இன்றும், நாளையும் இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.