பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்


  • சென்னை: தமிழ்நாட்டில் இன்று 22 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் வானிலை ஆய்வு மையம் சார்பாக விடுக்கப்பட்டுள்ளது. தெற்கு கேரளம் மற்றும் அதையொட்டிய தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுவதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஜூன் 2 முதல் ஜூன் 7 வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    கேரளா பகுதிகளில் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கக்கூடும். தெற்கு கேரளம் மற்றும் அதையொட்டிய தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும் தென்கிழக்கு அரபிக்கடல், அதையொட்டிய லட்சத் தீவு பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

    Advertisement

    அதுமட்டுமல்லாமல் கிழக்கு விதர்பா முதல் தெற்கு கேரளம் பகுதிகள் வரை தெலங்கானா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகம், தமிழ்நாடு, புதுச்சேரி வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுவதன் காரணமாக தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஜூன் 2 முதல் ஜூன் 7 வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

    நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    அதேபோல் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் நீலகிரி, கோவை, திருப்பூர், தென்காசி, நெல்லை, திண்டுக்கல், கன்னியாகுமரி, ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட ஓரிரு மாவட்டங்களில் இடி, மின்னல், காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

    இந்த மாவட்டங்களில் 3 நாட்களும் மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் அந்தமான கடல், தெற்கு ஆந்திரக் கடலோர பகுதிகள், தெற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடலில் சூறாவளிக் காற்று மணிக்கு 60 கிமீ வேகத்தில் வீசக்கூடும். தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக் கடலில் சூறாவளிக் காற்று வெள்ளிக்கிழமை வரை மணிக்கு 60 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    Heavy Rain Warning: Yellow Alert Issued for 22 Districts in Tamil Nadu; Thunderstorms Predicted Until June 7