கன்னியாகுமரிக்கு ரெட் அலர்ட்.. சுற்றுலா தளங்களை மூடிய மாவட்ட நிர்வாகம்.. எங்கெங்கு செல்ல தடை?

  • கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா தளங்களை மூட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால் கன்னியாகுமரியில் தற்போது வரை மழை பெய்யாததால், சுற்றுலா தளங்களுக்கு மக்கள் வந்து செல்கின்றனர்.

    Advertisement

    தமிழ்நாட்டில் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக் கூடும் என்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு இருக்கிறது.

    Advertisement

    இதனால் மாவட்ட நிர்வாகங்கள் தரப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே நீலகிரியில் பெய்த கனமழையால் மண் சரிவு ஏற்பட்டு மிகப்பெரிய சிக்கல் உருவாகி இருக்கிறது. அதனால் அடுத்த சில நாட்களுக்கு நீலகிரி மக்கள் யாரும் வர வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.

    அதேபோல் கன்னியாகுமரிக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், விவேகாந்தர் பாறை, திற்பரப்பு நீர்வீழ்ச்சி, பத்மநாதபுரம் அரண்மனை, மாத்தூர் தொட்டிப்பாலம், கடற்கரை பகுதிகள் என்று சுற்றுலா தளங்களுக்கு மக்கள் வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா தளங்களை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    Advertisement

    இருப்பினும் காலையில் இருந்து கன்னியாகுமரியில் மழை பெய்யவில்லை. இதனால் காலை 9 மணி முதலே சுற்றுலா தளங்களுக்கு மக்கள் வந்து செல்கின்றனர். கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு அபாரம் இருப்பதால், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    English Summary

    Kanyakumari Tourist Spots Ordered Shut Amid Red Alert Warning, Though Rain Yet to Begin