உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. சென்னை உள்பட 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

  • சென்னை: வடக்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மியான்மர் கடலோர பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்த நிலையில், தமிழகம், புதுவையில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகை, புதுச்சேரி, பாம்பன், தூத்துக்குடி உள்ளிட்ட துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    Advertisement

    வடக்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மியான்மர் கடலோர பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக (Depression), வழுவடைந்து அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வழுவடைந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாலை அல்லது இரவு நேரத்தில் யங்கோன் மற்றும் கியாக்டோ (Kyaikto) இடையே மியான்மர் கடற்கரையைக் கடக்கக்கூடும்.

    Advertisement

    9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு

    இது அடுத்த 3 நாட்களில் வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டிய வங்கதேச கடற்கரையை ஒட்டி கடக்கக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் தமிழகம், புதுவையில் சென்னை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகை, புதுச்சேரி, பாம்பன், தூத்துக்குடி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Advertisement

    மீனவர்களுக்கு எச்சரிக்கை

    வங்கக்கடல்பகுதிகள்:

    28-09-2026: வடக்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தெற்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    29-09-2026 மற்றும் 30-09-2026: மத்தியகிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    Advertisement

    இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் இன்று கரூர், திருச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

    Advertisement

    நாளை, ஈரோடு, நாமக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், விருதுநகர் புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.

    English Summary

    As the low-pressure area formed over the Bay of Bengal has intensified into a well-marked low-pressure area, storm warning signals (Signal No. 1) have been hoisted at nine ports across Tamil Nadu and Puducherry. These include the ports of Chennai, Ennore, Kattupalli, Cuddalore, Nagapattinam, Puducherry, Pamban, and Thoothukudi.