வலுவடையும் காற்றழுத்த தாழ்வு பகுதி! அடுத்த 2 மணி நேரம்.. சென்னை + 14 மாவட்டங்களில் மழை வெளுக்கும்!

  • சென்னை: தென் மேற்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் எனவும், தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    Advertisement

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, நெல்லை, தூத்துக்குடி, குமரி, தேனி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

    Advertisement

    வடகிழக்கு பருவமழை தீவிரம்

    தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. காலை நேரத்தில் வெளிச்சத்துடன் கூடிய வெயில் அடித்து வரும் நிலையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கனமழை விட்டு விளாசி வருகிறது. சென்னை முதல் குமரி வரை பரவலாக கனமழை கொட்டி தீர்த்துள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

    அதிகாலையில் வந்த அலர்ட்.. சென்னை உட்பட 23 மாவட்டங்களில் சம்பவம்.. 3 மணி நேரத்திற்கு மழை வெளுக்கும்!

    நேற்று முன் தினம் சென்னை மற்றும் வட மாவட்டங்களில் கன முதல் அதி கனமழை வரை வெளுத்து வாங்கியது. இதனால் பல்வேறு இடங்களில் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நேற்று கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.

    Advertisement

    ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்

    இன்றும் காலை முதல் பல்வேறு இடங்களில் வெயில் அடித்து வரும் நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    என்னடா ட்விஸ்ட்.. ரெட் அலர்ட் கொடுத்து எல்லாரும் எதிர்பார்த்தது சென்னை.. ஆனா கோவையில் வெளுத்த கனமழை

    "தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. இந்நிலையில் தென் மேற்கு அரபிக்கடலில் நேற்று ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேலும் வலுவடைந்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதனால் தமிழகத்தில் மேலும் பருவமழை தீவிரமடையும்.

    Advertisement

    15 மாவட்டங்களில் மழை வெளுக்கும்

    குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யலாம். அடுத்த 2 மணி நேரத்தில் அதாவது மாலை 4.00 மணி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தேனி, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய 15 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

    English Summary

    Low pressure area intensifies: The Meteorological Department has stated that a low-pressure area, which formed over the southwest Arabian Sea, is expected to intensify into a deep depression within the next 24 hours. Additionally, there is a possibility of rain across 15 districts in Tamil Nadu over the next 2 hours.