தெற்கு அந்தமானில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று சென்னையில் கொட்டப் போகுது மழை! வானிலை மையம்

  • சென்னை: தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும், இதனால் தமிழகத்தில் இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், நாளை, தமிழகத்தில் நாளை மதுரை, திருச்சி, நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் சென்னையில் இன்று ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

    Advertisement

    தமிழகத்தில் கடந்த இரு நாட்களாக பெரிய அளவில் மழை இன்றி வெயில் அடித்தது. தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்துள்ளது. இந்நிலையில் நாளை முதல் மழை மீண்டும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:-

    Advertisement

    காற்றழுத்த தாழ்வு மண்டலம்

    நேற்று முன் தினம் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல்
    நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுப்பெறக்கூடும். அதன் பிறகு, அடுத்த 2 நாட்களில் இது மேற்கு-வடமேற்கு திசையில் ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

    தமிழகத்தில் இன்று 31-10-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    Advertisement

    நாளை வடக்கு கடலோர தமிழக மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

    நீலகிரியில் கனமழை கொட்டும்

    நாளை மறுநாள் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    Advertisement

    3 ஆம் தேதி, மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

    சென்னையில் மழைக்கு வாய்ப்பு

    4 ஆம் தேதி, மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
    05-11-2026: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    Advertisement

    சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை

    இன்று 31-10-2026: தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு-மத்தியமேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகள், இதர தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு-மத்தியமேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    Advertisement

    நாளை 01-11-2026: மத்தியமேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள், ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்." என்று கூறப்பட்டுள்ளது.

    English Summary

    Low pressure area: The Meteorological Centre has stated that a low-pressure area, currently situated over the southern Andaman Sea and its adjoining regions, is set to intensify into a depression today. As a result, rain is expected in some areas along the Western Ghats districts and the coastal regions of Tamil Nadu today. For tomorrow, the forecast indicates a possibility of rain in the districts of Madurai, Trichy, Namakkal, Salem, Erode, and Karur. Additionally, the Meteorological Centre has noted that light rain is likely in some parts of Chennai today.