வங்கக்கடலில் சம்பவம்.. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது! 3 நாட்களுக்கு கொட்டப்போகும் கனமழை

  • சென்னை: இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று அதிகாலை உருவாகியிருக்கிறது என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் அறிவித்திருக்கிறார்.

    Advertisement

    காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, சென்னை தொடங்கி திருவாரூர் மாவட்டங்கள் வரை.. அதாவது வட கடலோர மாவட்டங்களில் பகல் நேரங்களில் விட்டு விட்டு கனமழை பெய்யும். அதேபோல ராமநாதபுரம் தொடங்கி கன்னியாகுமரி வரை மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்யும். இன்று தொடங்கி அடுத்த 3 நாட்களுக்கு வானிலை இப்படித்தான் இருக்கும் என்றும் ஹேமச்சந்திரன் எச்சரித்துள்ளார்.

    Advertisement

    தற்போது கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    சென்னையில் பல பகுதிகளில் மழை காரணமாக வெள்ளம் தேங்கியிருக்கிறது. இதை அப்புறப்படுத்தும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். நேற்றிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை சென்னையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 26 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியிருக்கிறது. வடபழனியில் 13 செ.மீ, சைதாப்பேட்டை 12.5 செ.மீ, ஆலந்தூரில் 11.9 செ.மீ என மழை பதிவாகியிருக்கியிருக்கிறது.

    டெல்டா மாவட்டங்களிலும் இரவு தொடங்கி இன்று அதிகாலை வரை கனமழை பதிவாகியிருக்கிறது. மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூரில் இன்று அதிகாலை லேசான மழை பெய்து வருகிறது.

    English Summary

    Low Pressure: Private meteorologist Hemachandran has announced that a low-pressure area formed early this morning over the southwest Bay of Bengal, off the coast of Sri Lanka.