நீலகிரியில் வெளுத்து கனமழை! பர்லியாரில் நிலச்சரிவு! ஓட்டுநர் பலி!

  • ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக உதகை-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பர்லியார் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கிய அரசு பேருந்து ஓட்டுநர் பலியான சம்பவம் நடந்துள்ளது.

    Advertisement

    நீலகிரி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் கனமழை பெய்யும் என ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு முதல் மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கோத்தகிரி, குந்தா மற்றும் கூடலூர், பந்தலூர் தாலுக்காக்களில் மழையின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

    Advertisement

    குறிப்பாக குன்னூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பர்லியார் அருகே மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் தற்போது குன்னூர் முதல் மேட்டுப்பாளையம் வரை தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பர்லியாரில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 25 செ.மீ. மழை பெய்துள்ளது. உதகையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற அரசு பேருந்து நிலச்சரிவில் சிக்கியது. இதில் சிக்கியவர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் எஞ்சியுள்ளவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

    கோவை, நீலகிரியில் உடையும் வானம்.. 3 மாவட்டங்களுக்கு பறந்த உட்சபட்ச அலர்ட்!
    Advertisement

    மாற்று பாதையாக கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில் பொதுமக்கள் பயணிக்கலாம் என வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாலையில் 3 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தொடர்ந்து மண் சரிவு ஏற்பட்டுள்ள பகுதிகளில் நெடுஞ்சாலை துறையினர், தீயணைப்பு துறையினர் சாலையில் ஏறப்பட்டுள்ள பாதிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அது போல் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் வெள்ளி நீர் வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. நீர் வழிப் பாதைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், பெருமாள்மலை அருகே உள்ள வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    பாலத்தின் மீதும் சாலைகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். மேலும், கொடைக்கானல்-வத்தலகுண்டு பிரதான மலைச்சாலையில் செண்பகனூர் அருகே மண் சரிவு ஏற்பட்டதுடன், உயர் அழுத்த மின்கம்பமும் சாய்ந்தது.

    கோவை, நீலகிரியில் இறங்கப்போகும் கனமழை! ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே!

    இதனால் சாலையின் இருபுறங்களிலும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தொடர் மழையால் பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுவதும், சாலைகளில் மண் சரிவு ஏற்படுவதும் தொடர்கிறது. பிரதான சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கின்றன.

    Advertisement

    வடிகால் வசதிகள் முறையாகப் பராமரிக்கப்படாததால் குடியிருப்புப் பகுதிகளிலும் மழைநீர் வெள்ளம்போல் புகுந்து செல்கிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சாலைகளில் ஏற்பட்ட மண் சரிவை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    English Summary

    Heavy rain in the Nilgiri, gives landslide at barliar on Ooty to Mettupalayam triggers disrupt traffic.