ரெட் அலர்ட் கிடையாது.. சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்! 4 மாவட்டங்களுக்கு வார்னிங்

  • சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் தீவிரமாக இருக்கிறது. குறிப்பாக சென்னையில் கடந்த சனிக்கிழமை இரவு தொடங்கி ஞாயிறு அதிகாலை வரை பலத்த மழை பெய்தது. எனவே சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. ஆனால் மழையின் தாக்கம் குறைந்ததால், தற்போது ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

    Advertisement

    சென்னையில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தது. ஆனால், மழையின் தாக்கம் கணிக்கப்பட்டதைவிட அதிகமாக இருந்தது.

    Advertisement

    சென்னையில் வெளுத்து வாங்கிய மழை

    குறிப்பாக சென்னையின் பாரிஸ் கார்னர், ராயபுரம், திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் மிக, மிக அதிகனமழை பெய்திருந்தது. பாரிஸ் கார்னர் பகுதியில் மட்டும் சுமார் 30 செ.மீக்கும் அதிகமாக மழை பதிவாகியிருந்தது. வழக்கமாக 20 செ.மீக்கு மேல் மழை பெய்தால் அது ரெட் அலர்ட் என்று வகைப்படுத்தப்படும். 30 செ.மீ என்பது டபுள் ரெட் அலர்ட் மாதிரி.. ஆனால் இவ்வளவு மழையை வானிலை மையம் முன்கூட்டியே கணிக்கவில்லை என்று விமர்சனங்கள் இருந்தன.

    ஆரஞ்சு அலர்ட்

    இதனை தொடர்ந்து நேற்று காலை சென்னையில் உள்ள மக்களின் செல்போன் எண்களுக்கு அவசர மெசேஜ் வந்தது. அதில், "சென்னையில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அப்படி எந்த மழையும் பெய்யவில்லை. இப்படி இருக்கையில் இன்று சென்னை, திருச்சி, கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.

    Advertisement

    இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

    முன்னாதாக நேற்று மதியம் வெளியாகியிருந்த வானிலை அறிவிப்பில், "19-10-2026: சென்னை, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.

    நீலகிரி, கோயம்புத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

    Advertisement

    நாளைய வானிலை நிலவரம்

    20-10-2026: தேனி, திருநெல்வேலி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.

    கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கரூர், பெரம்பலூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, அரியலூர் மாவட்டங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

    Advertisement

    21-10-2026: நீலகிரி, கோயம்புத்தூர், மதுரை, தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.

    சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஈரோடு, நாமக்கல், சேலம், திருப்பூர், விருதுநகர், தென்காசி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கரூர் மாவட்டங்களில் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

    Advertisement

    ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களிலும் மற்றும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

    22-10-2026: நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், ராமநாதபுரம், மதுரை, தூத்துக்குடி, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, ஈரோடு, புதுக்கோட்டை, கரூர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

    ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களிலும் மற்றும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

    23-10-2026: நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களிலும் மற்றும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

    24-10-2026: நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், மதுரை, புதுக்கோட்டை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களிலும் மற்றும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்" என எசசரிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Chennai rain: The impact of the Northeast monsoon is intense in Tamil Nadu. In Chennai, in particular, heavy rain fell from Saturday night through early Sunday morning, leading to the issuance of a 'red alert' for the city. However, as the intensity of the rainfall has since decreased, the alert level has now been downgraded to 'orange'.