சென்னை: தென்மேற்கு பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வந்தது. இப்படி இருக்கையில், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு அடுத்த 2 மணி நேரத்திற்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.
Advertisement
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Advertisement
இது தவிர திருப்பத்தூர், வேலூர், திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சி, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.