சென்னை: தமிழகத்தில் இன்று கோவை, நெல்லை, தென்காசி, குமரி, தேனி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை, திருவாரூர் ஆகிய 16 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையில் இன்று நகர்ப்பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்தாலும் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து ஒரு வாரமாக இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. நேற்றும் கோவை, நீலகிரி, தேனி, தென்காசியில் மழை பெய்தது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இன்று காலை கனமழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் இன்று தமிழகம் முழுக்க மொத்தம் 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது. வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- சுமார் 0.9 கிமீ உயரத்தில் குமரிக்கடல் பகுதிகளிலிருந்து வடக்கு உள் கர்நாடகா வரை தமிழகம் மற்றும் தெற்கு உள் கர்நாடகா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இன்று தமிழகத்தில் கோவை, நெல்லை மாவட்டங்களின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும் என ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்படுகிறது. தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கரூர், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை 10 ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள் மற்றும் நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். திண்டுக்கல், விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். 11 மற்றும் 12 ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். 13, 14 ஆம் தேதி வரை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் லேசான மழை பெய்யக்கூடும். இன்று முதல் 13-10-2026 வரை: வடக்கு உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும். சென்னையில் இன்று (09-10-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (10-10-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். தமிழக கடலோரப்பகுதிகள், வங்கக்கடல் பகுதிகள் & அரபிக்கடல் பகுதிகளில் எச்சரிக்கை ஏதுமில்லை. அழகரை எஸ்டேட் (நீலகிரி) 10, குன்னூர் PTO (நீலகிரி), எடப்பள்ளி (நீலகிரி) தலா 9, பர்லியார் (நீலகிரி) 7, பொதுப்பணித்துறை மக்கினம்பட்டி (கோயம்புத்தூர்), கடலாடி (ராமநாதபுரம்) தலா 6, பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), முதுகுளத்தூர் (ராமநாதபுரம்) தலா 5, கோத்தகிரி (நீலகிரி), இலுப்பூர் (புதுக்கோட்டை), குன்னூர் (நீலகிரி), கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), வாழப்பாடி (சேலம்) தலா 4, சிங்கம்புணரி (சிவகங்கை), காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்), கொடைக்கானல் படகு குழாம் (இண்டுக்கல்), ஆயிக்குடி (தென்காசி), சேத்துப்பட்டு (திருவண்ணாமலை), கெத்தை (நீலகிரி), மணமேல்குடி (புதுக்கோட்டை), திருச்செந்தூர் (தூத்துக்குடி), சங்கரன்கோயில் (தென்காசி), பெரியகுளம் (தேனி), கொல்லிமலை ARG (நாமக்கல்) தலா 3 செமீ மழை பெய்துள்ளது.இன்று 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
16 மாவட்டங்களில் மிதமான மழைக்கு சான்ஸ்
14 ஆம் தேதி வரை மழை
அதிகபட்ச வெப்பநிலை
சென்னையில் மழைக்கு சான்ஸ்
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
மழை அளவுகள் செமீ: