சென்னை: கோவை, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகள் நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களி பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை வானிலை மையம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. கடல் மட்டத்தில் தெற்கு குஜராத்தில் இருந்து வடக்கு கேரளம் வரை ஒரு காற்றழுத்த தாழ்வுப்பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக கோவை, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகள் நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களி பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடகடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானம மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சனிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் 7 இடங்களி வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையை எட்டியது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104.72 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. மதுரை நகரம் 102.92, பரங்கிப்பேட்டை 101.84, சென்னை நுங்கம்பாக்கம், பாளையங்கோட்டை தலா 100.4, திருச்சி 100.58, கடலூர் 100.04 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கோவை மாவட்டம் சோலையாரில் 100 மி.மீ., உபாசி, வால்பாறையில் தலா 80 மி.மீ., சின்னக்கல்லாரில் 60 மி.மீ. மழை பதிவானது. தென் தமிழக கடலோரப் பகுதிகள் மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.வெப்ப நிலை
24 மணி நேர மழை அளவு
மீனவர்களுக்கு எச்சரிக்கை