இன்றும், நாளையும்.. 4 மாவட்டங்களில் வெளுத்து கட்டப்போகும் கனமழை.. வானிலை மையம் அலர்ட்!

  • சென்னை: தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Advertisement

    அக்டோபர் மாதத்தை எட்டிவிட்ட போதும் தமிழ்நாட்டில் இன்னும் பருவமழை தொடங்கவில்லை. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதோடு காற்றும் அதிகளவில் இல்லாததால் மக்கள் திண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் மக்களுக்கு இனிப்பாக அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.

    Advertisement

    இதுதொடர்பான வானிலை ஆய்வு மையம் செய்தி குறிப்பில், தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அருகே உள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதியின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதுதவிர தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவும் வணி மண்டல சுழற்சியில் இருந்து மத்திய வங்கக் கடல் பகுதிகள் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

    இதன் காரணமாக இன்றும், நாளையும் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதேபோல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 21 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    Advertisement

    சென்னை புறநகர் பகுதிகாளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல் நிலவி வருவதாகவும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    English Summary

    Rain Alert: Heavy Rains With Thunderstorms Likely in Tirunelveli, Kanyakumari, Thoothukudi, and Ramanathapuram