சென்னையில் இன்று மழை இருக்கு.. சேலம் உள்பட 14 மாவட்டங்களில் இடி, மின்னலோடு மழை கொட்டும்!

  • சென்னை: சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்றும், நாளையும் பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    தமிழகத்தில் கடந்த இரு நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் வெயில் சுட்டெரிக்கிறது. காலை மற்றும் மதிய நேரங்களில் வாட்டி வதைக்கும் வெயிலால் மக்கள் கடும் அவதியடைந்தனர். எனினும் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை ஓரிரு இடங்களில் பெய்து வருகிறது.

    Advertisement


    இன்று இடி, மின்னலுடன் மழை பெய்யும்

    தமிழகத்தில் கடலூர், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் லேசான மழை அவ்வப்போது பெய்து வருகிறது. தென் மாவட்டங்களில் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் தான் தமிழகத்தில் இன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வெளியான வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதனால் இன்று மற்றும் நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

    Advertisement

    14 மாவட்டங்களுக்கு அலர்ட்

    சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

    6 ஆம் தேதி வரை மழைக்கு சான்ஸ்

    3 ஆம் தேதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

    Advertisement

    4 ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். 5, 6 ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

    சென்னையில் இன்று மழை பெய்யும்

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். என்று கூறப்பட்டுள்ளது.

    English Summary

    The Meteorological Department has stated that there is a possibility of rain accompanied by strong winds today and tomorrow in 14 districts, including Chennai. Rain is forecast for northern districts such as Thiruvallur, Kancheepuram, Chengalpattu, Tiruvannamalai, Villupuram, Kallakurichi, and Cuddalore.