சென்னை: தமிழகத்தில் இன்று இரவு சேலம், நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் என 15 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று இரவு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த இரு நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் மதியத்திற்கு பிறகு மழை வெளுத்து வாங்குகிறது. இந்த நிலையில் இன்று மாலையில் நெல்லை, தென்காசி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. மதுரை, கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் லேசான மழை பெய்தது.
இந்நிலையில் இன்று இரவு 10 மணி வரை தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. வானிலை அறிவிப்பில், "தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், சிவகங்கை, சேலம், ஈரோடு, நாமக்கல், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய 15 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதனால் சாலையின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது.15 மாவட்டங்களுக்கு அலர்ட்