சென்னையை மொத்தமாக நனைத்த மழை.. தேங்கி நிற்கும் நீர்! உதவி எண்கள் அறிவிப்பு

  • சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. குறிப்பாக நேற்றிரவு சென்னையில் கனமழை பெய்ததால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியிருக்கிறது. இந்நிலையில் மாநகராட்சி சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

    Advertisement

    நேற்றிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை சென்னையில் பரவலாக கனமழை பதிவாகியிருக்கிறது. அதிகபட்சமாக பாரிமுனையில் 30 செ.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது. 30க்கும் அதிகமான இடங்களில் 10 செ.மீக்கும் அதிகமான மழை பெய்திருக்கிறது. இதனால் பல இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

    Advertisement

    பாதிப்புகளை சமாளிக்க அதிகாரிகள் முழுமையாக களமிறக்கப்பட்டிருக்கின்றனர். குறிப்பாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் சென்னைக்கு வந்திருக்கின்றனர். வேளச்சேரி, திருவொற்றியூர், எண்ணூர் போன்ற பாதிப்புகள் அதிகம் இருக்கும் பகுதியில் இவர்கள் மீட்பு பணிகளிலும், வெள்ள வடிகால் பணிகளையும் மேற்கொள்வார்கள் என்று சொல்லப்படுகிறது. முதற்கட்டமாக மொத்தம் 30 வீரர்கள் களமிறங்கியிருக்கின்றனர்.

    இந்நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

    திருவொற்றியூர் 9445190001, 8925546901
    மணலி 9445190002, 8925546902
    மாதவரம் 9445190003, 8925546903
    தண்டையார்பேட்டை 9445190004, 8925546904
    இராயபுரம் 9445190005, 8925546905
    திரு.வி.க. நகர் 9445190006, 8925546906
    அம்பத்தூர் 9445190007, 8925546907
    அண்ணாநகர் 9445190008, 8925546908
    தேனாம்பேட்டை 9445190009, 8925546909
    கோடம்பாக்கம் 9445190010, 8925546910
    வளசரவாக்கம் 9445190011, 8925546911
    ஆலந்தூர் 9445190012, 8925546912
    அடையாறு 9445190013, 8925546913
    பெருங்குடி 9445190014, 8925546914
    சோழிங்கநல்லூர் 9445190015, 8925546915

    Advertisement

    இதில் முதலில் உள்ள எண்கள் மண்டல அலுவலரினுடையது. இரண்டாவது உள்ள எண்கள் கண்காணிப்பு அலுவலருடையது. இது தவிர மாநகராட்சி உதவி எண் 1913 அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    English Summary

    Chennai rain: The Northeast monsoon has intensified in Tamil Nadu. In particular, heavy rainfall in Chennai last night has led to waterlogging in various areas. In light of this, the municipal corporation has announced helpline numbers.