இன்று கொட்டித்தீர்க்கப் போகும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட்? வானிலை ஆய்வு மையம் வார்னிங்!

  • சென்னை: கோவை, தேனி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிடு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மகனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுத்துள்ளது. அதேபோல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுஇள்ள அறிக்கையில், சுமார் 5.8 கிமீ முதல் 7.6 கிமீஉயரம் வரை தென்மேற்கு வஙக்கடல் பகுதிகள் முதல் லட்சத்தீவு பகுதிகள் வரை தென் தமிழகம் மற்றும் கேரளா வழியாக ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வு பாதை நிலவி வருகிறது. வட தமிழக கீழ்மட்ட வளிமண்டலத்தில் கடலோரப் பகுதிகளில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

    Advertisement

    இதன் காரணமாக இன்று கோவை, தேனி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும்.

    ஏனைய தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுட கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை ஆகஸ்ட் 8ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும்.

    Advertisement

    ஆகஸ் 9 முதல் ஆகஸ்ட் 12 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய வெப்ப நிலையை பொறுத்தவரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு என்றாலும், சற்று குறையும் என்று கூறப்பட்டுள்ளது.

    சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி முதல் 36 டிகிரி வரை செல்ஷியஸ் வரை இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்ஷியஸாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    Rain: Regional Met Centre Issues Heavy Rain Warning with Thunderstorms for Coimbatore, Theni, and Nilgiris