அடுத்த 3 மணி நேரம்.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களில் கொளுத்த போகுது மழை.. வானிலை அப்டேட்

  • சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், நாமக்கல், தஞ்சை, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    Advertisement

    தமிழகம் முழுக்கவே கடந்த ஒரு வாரமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் வெயில் அடித்தாலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, குமரியில் கடந்த ஒரு வாரமாகவே மழை பெய்து வருகிறது.

    Advertisement

    சென்னையில் காற்றுடன் மழை

    தலைநகர் சென்னை மற்றும் கோவை, நீலகிரி, தேனி, விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகவே மழை பெய்து வருகிறது. மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்வதால் சென்னை நகரம் குளிர்ந்து காணப்படுகிறது.

    இன்றும் மதிய நேரங்களில் சென்னையில் பல இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை கொட்டியது. இந்நிலையில் அடுத்த ஒரு 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    Advertisement

    22 மாவட்டங்களில் மழை கொட்டும்

    "திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், பெரம்பலூர், ஈரோடு, கரூர், திருச்சி, கிருஷ்ணகிரி, கடலூர், அரியலூர், நாமக்கல், திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய 22 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

    இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும், ஏனைய தமிழகம், மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    Advertisement

    15 ஆம் தேதி வரை மழை தான்

    10 ஆம் தேதி, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 11 ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    12 மற்றும் 13 ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும், ஏனைய தமிழகம், மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    Advertisement

    14 ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 15 ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

    சென்னையில் மழை இருக்கு

    சென்னையில் இன்றும், நாளையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

    English Summary

    Rain Set to Lash 22 Districts Across Tamil Nadu in the Next 3 Hours: The Meteorological Department has forecast rain in 22 districts of Tamil Nadu over the next three hours. Rain accompanied by thunder and lightning is expected in districts including Tiruvallur, Ranipet, Vellore, Tirupattur, Namakkal, Thanjavur, Madurai, Virudhunagar, Pudukkottai, and Dindigul.