இன்று 9 மாவட்டங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மழை வெளுக்கும்.. வானிலை மையம் விடுத்த அலர்ட்!

  • சென்னை: மதுரை, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட 9 மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    Advertisement

    தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழ்நாடு பகுதிகள் வழியாக சுமார் 0.9 கிமீ உயரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    Advertisement

    கடலூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும், மதுரை, விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும் இன்று பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறியுள்ளது. இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாளை மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் எனத் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டின் தென் கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கணித்துள்ளது.

    Advertisement

    சென்னையை பொறுத்தவரை இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி ஃபாரன்ஹீட் வரை பதிவாகும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக் கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    English Summary

    The Meteorological Department has forecast the possibility of moderate rain accompanied by strong winds today in nine districts—including Madurai, Virudhunagar, and Sivaganga—as well as in the districts along the Western Ghats.