அடுத்த 3 நாட்கள்.. தமிழ்நாடு முழுவதும் நல்ல மழை பெய்யும்.. வெதர்மேன் பிரதீப் ஜான் கொடுத்த அலர்ட்!

  • சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 2-3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இன்று கடலோர மாவட்டங்களிலும், நாளை தென் மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்று கூறிய வெதர்மேன் பிரதீப் ஜான், நீர்நிலைகள் வறண்டு போல் இருப்பதால், தற்போது அதிக மழை தேவை என்றும் கூறியுள்ளார்.

    Advertisement

    கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் சனிக்கிழமையன்று இடைவிடாமல் பெய்த மழையால், ஆங்காங்க மழைநீர் தேங்கியது.

    Advertisement

    இன்றும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் அளித்துள்ள பேட்டியில், இலங்கைக்கு அருகே மேலட்டு சுழற்சி இருப்பதை பார்க்கிறோம். மேலடுக்கு சுழற்சியில் இருந்து காற்றழுத்த பகுதியாக உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வடகடலோர மாவட்டங்களில் இன்று இரவில் இருந்து நாளை காலை வரை நல்ல மழை பெய்யும்.

    மேலும் காற்றழுத்த பகுதி அரபிக்கடல் போகிறது. அதனால் உள் மாவட்டங்களுக்கு காற்றழுத்த பகுதி செல்லும் என்பதால், தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதன் தாக்கம் இன்று கடலோர மாவட்டங்களிலும், நாளை தென் மாவட்டங்களிலும் கனமழை பெய்யும். இதன் தாக்கம் அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு பரவலாக இருக்கும்.

    Advertisement

    இது புயலாக மாறாது. தென் கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த பகுதி உருவாகிறது. அதில் மண்டலமாக மாறினால், புயலாகவும் மாறலாம். அதற்கு நேரம் இருக்கிறது. அது இந்திய கடலோர பகுதியை நோக்கி வரும் போது, எந்தப் பக்கம் செல்லும் என்று தெரிய வரும். தமிழ்நாடு முழுவதும் நல்ல மழை கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது.

    அடுத்த காற்றழுத்த பகுதி மேல் நோக்கி சென்றுவிட்டால், அப்போது மழை குறைய வாய்ப்புள்ளது. எல் நினோ ஆண்டு என்பதால், தீவிர மழை கிடைத்திருக்கிறது. 10 - 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் சூப்பர் எல்நினோ வரும். எப்படி வெப்பம் அதிகமாக இருப்பதை போல் மழையும் அதிகமாக இருக்கும். இந்த முறை 4 புயல்கள் வர வேண்டிய சூழலில், 1 அல்லது 2 தான் வரும்.

    Advertisement

    ஆனால் வங்கக்கடலில் 2 புயல்கள் வரும் சூழலில், 4 புயல்கள் கூட உருவாகலாம். இதற்கு எல் நினோ காரணமாக இருக்கும். நீர்நிலைகளில் நிலத்தடி நீர் குறைவாக இருக்கிறது. அதனால் தமிழ்நாட்டிற்கு மழை தேவை.. நவம்பர் கடையில் அல்லது டிசம்பரில் பெருமழை வரும் போது, அது வெள்ளமாக மாறுமா என்பதை பார்க்க வேண்டும். ஆனால் இப்போது நல்ல மழை தேவை. சென்னையை பொறுத்தவரை சராசரி மழையை விட அதிக மழை கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    Rain: Widespread Rains Expected Across Tamil Nadu for Next 2–3 Days Says Weatherman Pradeep John