சென்னை: சென்னையில் இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதே போன்று திருவள்ளூர், செங்கல்பட்டு, நீலகிரி, கோவை, தேனி ஆகிய 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்படுகிறது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
நாளை அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ள நிலையில், இன்றும் தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று இரவு ஒரே நாளில் அதி கனமழை கொட்டி தீர்த்துள்ளது. சென்னை பாரிமுனையில் மட்டும் 35 செமீட்டருக்கு மேல் மழை கொட்டி தீர்த்துள்ளது. தனியார் வானிலை ஆய்வாளர்கள் மேகவெடிப்பு என கூறிய நிலையில், வானிலை ஆய்வு மையம், மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலன மேகங்களின் செயல்பாட்டால் தான் அதி கனமழை பெய்ததாக விளக்கம் அளித்து இருந்தது. இதனால் வடகிழக்கு பருவமழை தொடங்கிய மூன்றாவது நாளே சென்னை நகரம் வெள்ளத்தில் மூழ்கியது. சில இடங்களில் மழை பெய்த அடையாளமே இல்லாத வகையில் தண்ணீர் முற்றிலுமாக வடிந்து இருந்தது. ஒரு சில இடங்களில் தேங்கிய மழை நீரை அகற்ற மாநகராட்சியினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். நேற்று தான் இப்படி என்றால் இன்றும் சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மிக கனமழை கொட்டும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் நேற்று 6 இடங்களில் அதி கனமழை பெய்த நிலையில் இன்றும் சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- சுமார் 1.5 கிமீ முதல் 3.1 கிமீ உயரம் வரை லட்சத்தீவு பகுதிகள் முதல் மத்தியமேற்கு வங்கக்கடல்ப்பகுதிகள் வரை கர்நாடகா, தெற்கு ஆந்திரா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. சுமார் 0.9 கிமீ உயரத்தில் வடஉள் கர்நாடகா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 0.9 கிமீ உயரத்தில் வடஉள் கர்நாடகா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 7.6 கிமீ உயரம் வரை மத்திய மேற்க்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இன்று 19 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை, நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும். திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, கடலூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். நாளை திங்கட்கிழமை, சென்னை, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். 20-10-2026: தேனி, திருநெல்வேலி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கரூர், பெரம்பலூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, அரியலூர் மாவட்டங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். 21 ஆம் தேதி, நீலகிரி, கோயம்புத்தூர், மதுரை, தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல், மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஈரோடு, நாமக்கல், சேலம், திருப்பூர், விருதுநகர், தென்காசி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கரூர் மாவட்டங்களில் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களிலும் மற்றும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். 22 ஆம் தேதி: நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், ராமநாதபுரம், மதுரை, தூத்துக்குடி, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, ஈரோடு, புதுக்கோட்டை, கரூர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களிலும் மற்றும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். 23-10-2026: நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களிலும் மற்றும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். 24-10-2026: நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், மதுரை, புதுக்கோட்டை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களிலும் மற்றும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். இன்று (18-10-2026): வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் இடை இடையே ஒரிரு முறை மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது அதிகபட்ச வெப்பநிலை 31 -32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (19-10-2026): வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் இடை இடையே ஓரிரு முறை மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.பருவமழை தொடங்கிய 3வது நாளே..
சென்னைக்கு இன்று ரெட் அலர்ட்
விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை.. ஆனாலும் காலை சென்னையில் 21 சுரங்கப்பாதைகளிலும் நீர் தேங்கவில்லை
கனமழை பெய்யக்கூடும்
Low pressure area: இனி தான் சம்பவம் இருக்கு! அரபிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. அதி கனமழை வெளுக்குமாம்!
பலத்த காற்றுடன் கூடிய மழை
சென்னை மக்களின் செல்போன்களில் திடீரென ஒலித்த அலாரம்.. அதி கனமழை வாய்ப்புள்ளதால் தமிழக அரசு அலர்ட்
21 ஆம் தேதி
சென்னையில் அவ்வளவு மழை பெய்திருக்கு.. ஆனா பாருங்க முதல்வர் கண்ட்ரோல் ரூமுக்கு போகவே இல்ல!
23, 24 ஆம் தேதி
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: