நள்ளிரவிலும் விடாத மழை.. சென்னை டூ குமரி வரை தமிழகம் முழுக்க 28 மாவட்டங்களுக்கு அலர்ட்

  • சென்னை: தமிழகத்தில் நள்ளிரவு 1 மணி வரை தமிழகம் முழுக்க 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதில் கடலூர், சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 10 மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும், சென்னை, ஈரோடு, குமரி, தென்காசி என 18 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

    Advertisement

    தமிழகம் முழுக்க கடந்த இரு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை முதல் குமரி வரை பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவும் சென்னையில் பரவலாக மழை பெய்தது. வடபழனி, கோயம்பேடு, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு நேரமும் லேசான மழை பெய்தது.

    Advertisement

    இந்நிலையில் நள்ளிரவு 1 மணி வரை 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் 18 மாவட்டங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    ஆரஞ்சு நிற எச்சரிக்கை:
    தமிழகத்தில் கடலூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், பெரம்பலூர், சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் புதுவையில் நள்ளிரவு 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    மஞ்சள் நிற எச்சரிக்கை:
    இதேபோன்று சென்னை, செங்கல்பட்டு, அரியலூர், திண்டுக்கல், ஈரோடு, குமரி, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தஞ்சை, தேனி, தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, காஞ்சிபுரம், விருதுநகர் ஆகிய 18 மாவட்டங்களில் இடி மின்னலோடு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

    English Summary

    Chennai: The Meteorological Department has announced that rain is expected in 28 districts across Tamil Nadu until 1:00 AM. An 'Orange Alert' for heavy rain has been issued for 10 districts, including Cuddalore, Salem, Dharmapuri, Tiruvannamalai, and Villupuram, while moderate rainfall is forecast for 18 districts, including Chennai, Erode, Kanyakumari, and Tenkasi.