அடுத்த 2 மணி நேரம் உஷார்! திருவண்ணாமலை டூ கன்னியாகுமரி வரை.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!

  • சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமெடுத்திருக்கிறது. இன்று காலை 10 மணி வரை திருவண்ணாமலை தொடங்கி கன்னியாகுமரி வரை 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.

    Advertisement

    இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ள அறிவிப்பில் "திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி, திருப்பத்தூர், விழுப்புரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு காலை 10 மணி வரை மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது" என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    Advertisement

    இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என்றும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    கனமழை காரணமாக தமிழகம் முழுவதும் 5 மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, கன்னியாகுமரி-கேரள எல்லையில் கனமழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டதில், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது.

    பாறசாலை பகுதியில் மண் சரிவு ஏற்பட்டதால், ரயில் தண்டவாளத்தில் மண் குவிந்துள்ளது. இதனால், நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே ரயில் சேவை நிறுத்தப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட ரயில் பாதையை ஊழியர்கள் சீரமைத்து வருகின்றனர்.

    Advertisement

    அதேபோல முன்னதாக நேற்று மதியம் வெளியிடப்பட்ட வானிலை அறிவிப்பில், "இன்று (அக்.22) தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, கோயம்புத்தூர், நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.

    திருச்சிராப்பள்ளி, ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், கடலூர், நாமக்கல், விழுப்புரம், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

    Advertisement

    நாளை (அக்.23) கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.

    ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, அரியலூர், கடலூர், விழுப்புரம், திருப்பூர் மற்றும் பெரம்பலூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்" என எச்சரிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்குது.

    English Summary

    yellow alert: The Northeast monsoon has intensified in Tamil Nadu. A 'yellow alert' has been issued for 7 districts—stretching from Tiruvannamalai down to Kanyakumari—effective until 10:00 AM today.