அதிகாலை வந்த முக்கிய அலர்ட்.. சென்னை, செங்கல்பட்டு உட்பட 16 மாவட்டங்களில் மழை வெளுக்கும்

  • சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, வடகடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த மழையால் பல இடங்களில் 100 மி.மீ.க்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது.

    Advertisement

    வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 16ம் தேதி தொடங்கிய நிலையில், தமிழ்நாட்டில் நல்ல மழை பெய்து வருகிறது. நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் எப்போதும் தென்மேற்கு பருவமழை சமயத்திலேயே மழை அதிகமாக இருக்கும். ஆனால், சென்னை மற்றும் வட மாவட்டங்களுக்கு பெரும்பாலும் வடகிழக்கு பருவமழை சமயத்திலேயே மழை அதிகமாக இருக்கும்.

    Advertisement

    அடுத்த 3 மணி நேரம்

    இந்த முறையும் அதேபோல பருவமழை ஆரம்பித்து முதலே தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு சென்னையில் ஆரம்பித்த மழை இரவு முழுக்க கொட்டி வருகிறது. சென்னையின் நகர் பகுதிகள் மட்டுமின்றி, புறநகர் பகுதிகளிலும் நல்ல மழை கொட்டி வருகிறது. இதனால் சென்னை உட்பட 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் கூட விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    மழை கொட்டும்

    இதற்கிடையே தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    Advertisement
    "மழை இன்னும் முடியல.. மேலும் தீவிரமடையும்!" சென்னையில் விடிய விடிய கொட்டிய மழை.. வெதர்மேன் வார்னிங்

    வடகடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும் என்பதால், காலையில் வேலைக்கு செல்வோர் அதற்கேற்ப தங்கள் பயணத்தை திட்டமிட்டு கொள்ளவும். கனமழை காரணமாக டிராபிக் பாதிப்பு ஏற்படும் என்பதால் முன்கூட்டியே கிளம்புவது டென்ஷனை தவிர்க்கும்.

    டாப் 5 பகுதிகள்

    சென்னையை பொறுத்தவரை நேற்றிரவு ஆரம்பித்து விடியவிடிய மழை கொட்டியுள்ளது. அதிகாலை 3.30 மணி வரையிலான மழை பதிவுகளின்படி, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பல இடங்களில் 100 மி.மீ. அளவைக் கடந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே உள்ள கோலபாக்கத்தில் அதிகபட்சமாக 108.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னையின் வடபழனி பகுதியில் 108.6 மி.மீ. மழையும், சைதாப்பேட்டையில் 103.2 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. மேலும், மதுரவாயலில் 100.5 மி.மீ., நெற்குன்றம் பகுதியில் 99.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

    Advertisement
    சென்னையில் விடிய விடிய கொட்டிய மழை! பல்வேறு இடங்களில் 10 செ.மீக்கும் அதிகமாக மழை பதிவு!

    தீவிரமடையும் மழை

    வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்யும் சூழல் நிலவுகிறது. சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அக்டோபர் 21ஆம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என்றும், அதன் பின்னரும் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். கனமழை பெய்யும்போது தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.

    English Summary

    Weather department has forecast rain in 16 districts of Tamil Nadu over the next three hours(தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரம் கொட்டும் கனமழை): Tamil Nadu Rain Alert latest news in tamil.