சென்னை: தமிழகம் முழுவதும் வெயில் கொளுத்தி வருகிறது. இப்படி இருக்கையில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது சற்று ஆசுவாசத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
Advertisement
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கையில், இன்று தமிழகத்தின் உள் மற்றும் மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் 5 மாவட்டங்களி்ல் கனமழை பெய்யும். குறிப்பாக கோயம்புத்தூர், தூத்துக்குடி. திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.
Advertisement
இது தவிர டெல்டா மாவட்டங்களிலும், வட கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்யும். நாளை கோயம்புத்தூர், நீலகிரியிலும், அக்.9ல் 4 மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.