செங்கல்பட்டு டூ விருதுநகர்.. 8 மாவட்டங்களில் கொட்டப்போகும் பேய் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!


  • சென்னை: தமிழகத்தில் தற்போது பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. இந்நிலையில், 8 மாவட்டங்களுக்கு அடுத்த 2 மணி நேரத்திற்கு பலத்த மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

    Advertisement

    சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்திருக்கும் இந்த எச்சரிக்கையில், "செங்கல்பட்டு, திண்டுக்கல், ஈரோடு, மதுரை, சிவகங்கை, நீலகிரி, திருவள்ளூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இரவு 10 மணி வரை பலத்த மழை பெய்யும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்த 8 மாவட்டங்களுக்கும் மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

    Advertisement

    முன்னதாக இன்று மதியம் விடுக்கப்பட்ட வானிலை அறிவிப்பில், "கடலோர ஆந்திரப்பிரதேசத்திலிருந்து மத்திய மகாராஷ்டிரா வரை தெலுங்கானா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள், மராத்வாடா பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியின் வழியாக சுமார் 3.1 கிமீ முதல் 4.5 உயரத்தில் ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.

    26-06-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    Advertisement

    27-06-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.

    28-06-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.

    Advertisement

    29-06-2026: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    English Summary

    Tamil Nadu Weather Alert: The monsoon has intensified in Tamil Nadu. Against this backdrop, a heavy rain warning has been issued for eight districts for the next two hours.