குடையை ரெடியா வெச்சுக்கோங்க.. தமிழகத்தில் சுட்டெரிக்கப் போகும் வெயில்.. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?

  • சென்னை: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பகல் நேரத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் என்றும், அதன்படி, அதையொட்டிய ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இன்று இயல்பைவிட 2-4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    Advertisement

    இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழகத்தின் கீழ் வளிமண்டல அடுக்குகளில் மேற்கு முதல் வடமேற்கு திசையிலான காற்றோட்டம் நிலவி வருகிறது. இதனால், உள் மாவட்டங்களில் காற்று வீசும். வட தமிழகம், கொங்கு மண்டலத்தில் குறிப்பாக ஈரோடு, நாமக்கல், கரூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்த சில நாள்களில் மழை குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    மேலும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பகல் நேரத்தில் வெப்பநிலை அதிகரிக்கும். அதன்படி, ஈரோடு, கரூர், அதையொட்டிய ஒரு சில இடங்களில் வெள்ளிக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2-4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    தமிழகத்தில் வியாழக்கிழமை அதிகபட்சமாக திருச்சியில் 103.1 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. மதுரை விமான நிலையம் 102.2, ஈரோடு 101.48, நாகப்பட்டினம் 100.94, பாளையங்கோட்டை, தஞ்சாவூர் 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

    தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்நிலை வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தருமபுரியில் 70 மி.மீ., கோவை சோலையாறு பகுதியில் 50 மி.மீட்டர் மழை பதிவானது.

    English Summary

    The Regional Meteorological Centre, Chennai, has stated that daytime temperatures are expected to rise in the Western Ghats region; consequently, maximum temperatures in a few adjacent areas are likely to be 2–4°C above normal today.