ராயலசீமாவில் நடக்கும் சம்பவம்.. சுத்து போட்டு அடிக்க போகும் கனமழை.. பெரிய எச்சரிக்கை காத்திருக்கு


  • சென்னை: தமிழ்நாட்டில் கோடை வெயில் முடிந்த கையோடு நல்ல மழை பெய்து வருகிறது. மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் வெப்பம் குளிர்ந்துள்ள சூழலில் மக்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இதற்கிடையே இன்றைய தினமும் கூட மாநிலத்தில் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்க்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    Advertisement

    கடந்த சில நாட்களாகவே மாநிலத்தில் பல இடங்களில் வெப்பம் குறைந்து, குளிர்ச்சியான ஒரு கிளைமேட் நிலவுகிறது. மாநிலத்தில் வெப்பம் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், மழை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்றைய தினமும் கூட மாநிலத்தில் பல இடங்களில் மழை இருக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

    Advertisement

    வானிலை மையம்

    இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சுமார் 3.1 கிமீ மற்றும் 4.5 கிமீ உயரத்தில் ராயலசீமா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவுகிறது. இன்றைய தினம் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.

    Advertisement

    தென்தமிழகம்

    நாளைய தினம் தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் ஜூன் 24ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    வரும் நாட்கள்

    வரும் 25, 26 தேதிகளில் வட கடலோர தமிழகம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    Advertisement

    இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாட்டைப் பொறுத்தவரை வரும் 25 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியும் இயல்பை விடக் குறைந்தும் இருக்கக்கூடும்.

    சென்னை கிளைமேட்

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது.

    English Summary

    Meteorological Centre Chennai has forecasted heavy rain with strong winds for Coimbatore, Nilgiris, Dindigul, Theni, and Sivagangai(தமிழகத்தில் இரு நாட்கள் கொட்டி தீர்க்கும் கனமழை): Tamil nadu weather latest updates in tamil.