குடையை ரெடியா வெச்சுக்கோங்க.. சென்னையை குறிவைக்கும் மழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட்

  • சென்னை: காற்று திசை மாறுபாடு காரணமாக தமிழகத்தில் மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட வடமாவட்டங்களில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை (செப்டம்பர் 25, 26) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    Advertisement

    இதுகுறித்து, சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து வியாழக்கிழமை அதிகாலை சுமாா் 1 மணி அளவில் கலிங்கப்பட்டினத்துக்கு மிக அருகில் கரையைக் கடந்தது.

    Advertisement

    எந்தெந்த பகுதிகளில் மழை

    இதனால், ஏற்பட்ட காற்று திசை மாறுபாடு காரணமாக, செப்டம்பர் 25, 26 ஆம் தேதிகளில் (இன்று, நாளை) மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தின் மற்ற ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    Due to a change in wind direction, moderate rain is likely in Chennai, Western Ghats districts and several northern parts of Tamil Nadu on September 25 and 26.