Rain: தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் கனமழை? எந்த மாவட்டங்களில் வெயில்? சென்னை வானிலை மையம் அப்டேட்

  • சென்னை: தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும், எங்கெல்லாம் வெயில் சுட்டெரிக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம். சென்னையில் இன்ற லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.

    Advertisement

    வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் நாளையும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

    Advertisement

    30-07-2026: நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

    31-07-2026: கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

    01-08-2026: கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். உள் மற்றும் வடகடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    Advertisement

    28-07-2026 முதல் 31-07-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு.

    28-07-2026 முதல் 30-07-2026 வரை: அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4" செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக் கூடும்.

    சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39* செல்சியஸை ஒட்டியும். குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஓட்டியும் இருக்கக் கூடும்.

    Advertisement

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:


    வங்கக்கடல் பகுதிகள்:

    28-07-2026: வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் தென் வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகள், மத்திய வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    29-07-2026: வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், வடமேற்கு-மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும. எனவே இப்பகுதிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம்," என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    English Summary

    Tamil nadu may see scorching heat in some places and receives moderate rain in some where else. Check What did Chennai Meteorological Department says!