தமிழகத்தில் மழை ஆட்டம் ஆரம்பம்.. 19 மாவட்டங்களுக்கு வாய்ப்பு.. சென்னையில் என்ன நிலவரம்?

  • சென்னை: தமிழகத்தில் மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    Advertisement

    இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: தெற்கு உள்ஒடிஸா, அதையொட்டிய சத்தீஸ்கா் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், வடக்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து நேற்று காலை வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக அதே பகுதிகளில் நிலவுகிறது.

    Advertisement

    19 மாவட்டங்களுக்கு மழை

    இது மேலும் வடக்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கக் கூடும். இதன் காரணமாக, மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூா், ஈரோடு, திருச்சி, அரியலூா், பெரம்பலூா், திண்டுக்கல், மதுரை, விருதுநகா், புதுக்கோடடை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு இன்று வாய்ப்புள்ளது.

    புதுச்சேரி, காரைக்கால்

    தமிழகத்தின் மற்ற இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

    Advertisement

    வெப்பநிலை கூடும்

    தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 103.1 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. பாளையங்கோட்டை - 102.2, புதுச்சேரி - 101.66, மதுரை நகரம் - 101.48, திருச்சி - 101.3, வேலூா் - 100.94, தஞ்சாவூா், கரூா்பரமத்தி தலா 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அக்டோபர் 1 ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    Rain with thunderstorms and strong winds is likely in several Tamil Nadu districts today, while temperatures may remain 2-3°C above normal in some places until October 1.