தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?.. வானிலை மையம் ஜில் அப்டேட்

  • சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 8) இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    Advertisement

    இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: தெற்கு தெலங்கானா முதல் மன்னாா் வளைகுடா வரை ராயலசீமா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுவதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 8) இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

    Advertisement

    சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் புதன்கிழமை (செப்டம்பர் 9) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, சென்னை, திருவள்ளூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

    வெப்பம் அதிகரிக்கும்

    உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 11) சற்று அதிகமாக இருக்கும். திங்கள்கிழமை அதிகபட்சமாக வேலூா் மாவட்டத்தில் 104.9 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. ஈரோடு 103.64, திருச்சி 102.38, பாளையங்கோட்டை 101.12, பரமத்தி வேலூா் 101.3, நாமக்கல் 100.22 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

    Advertisement

    அதிகபட்ச மழை

    தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் பகுதியில் 90 மி.மீ. மழை பதிவானது. செங்குன்றம், சோழவரம் (திருவள்ளூா்), மதுராந்தகம் தாலுகா அலுவலகம் (செங்கல்பட்டு), கேத்தி (நீலகிரி) 60 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    Light rain with thunderstorms is likely in parts of Tamil Nadu, Puducherry and Karaikal on September 8, while moderate rain may occur in some northern and western districts and temperatures are expected to rise in interior Tamil Nadu.