இன்றுடன் Sun-க்கு ரெஸ்ட்! துணி காய வச்சி எடுங்க! சென்னையில் நாளை முதல் மழை! வெதர்மேன் அலர்ட்

  • சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னர் துணியெல்லாம் வெயிலில் காயவைக்க இன்றே கடைசி நாள் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: வடகிழக்கு பருவமழை ஓரிரு நாட்களில் தொடங்க போகிறது. அதற்கு முன்னர் வெயிலில் துணிகளை காய வைத்து எடுக்க இன்றுதான் கடைசி மற்றும் சரியான நாள்.

    Advertisement

    நாளை முதலே மழை பெய்ய தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பருவமழை அக்டோபர் 15 ஆம் தேதி முதல் தொடங்க வாய்ப்புள்ளது. எனவே சென்னை உள்பட தமிழகத்தின் வடமாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்றுதான் வெயில் இருக்கும் என்பதால் இன்றே துணிகளை காயவைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

    தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் 15 ஆம் தேதி முதல் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அடுத்த 2 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது. ஏற்கெனவே தென்மேற்கு பருவமழை விலகிவிட்டது. இதற்கிடையே தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் சுமார் 5.8 கி.மீ. உயரம் வரை நிலவும் வளி மண்டல சுழற்சி காரணமாக இன்றைய தினம் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

    Advertisement

    இதன் தாக்கத்தால் தமிழகத்தில் வரும் 15 ஆம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. அது போல் தமிழகத்தில் மழை குறித்து சென்னை வானிலை மையம் கூறியிருப்பதாவது: டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 13-ம் தேதி (இன்று) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

    14-ம் தேதி சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, விருதுநகர், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், கரூர், திருச்சி,அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், மதுரை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

    Advertisement

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    English Summary

    Tamil nadu Weatherman Pradeep John says that Today is the last proper day to dry your clothes in the sunshine before the Northeast Monsoon kicks in.