சென்னை: தமிழகத்தின் தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் நேற்று பல இடங்களில் நல்ல மழை பெய்த நிலையில், இன்றும் இதே மழை தொடரும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளை ஒட்டியுள்ள மாவட்டங்களில் நேற்று நல்ல மழை கிடைத்ததாக அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக நாம் விரிவாக பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் இந்த முறை கோடை காலம் நீட்டித்த ஒன்றாகவே இருந்தது. எல் நினோ நிகழ்வு காரணமாக மார்ச்- ஏப்ரல் மாதங்களில் தொடங்கிய கோடை காலம் நீடித்து கொண்டே போனது. தமிழ்நாடு முழுக்கவே கூட போதியளவு மழை இல்லை. இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். இதனால் தமிழ்நாட்டில் போதிய பருவமழை இல்லாமல் பற்றாக்குறை உடனேயே நிறைவு செய்தது.
இந்தச் சூழலில் தான் கடந்த சில நாட்களாகவே கிளைமேட் ஓரளவுக்கு மாறி மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இதனால் மாநிலத்தில் வெப்பம் குறைந்து குளுகுளு கிளைமேட் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே மழை தொடர்பாக முக்கிய தகவல்களை குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், வரும் நாட்களில் மழை எப்படி இருக்கும் என்பது குறித்தும் சில தகவல்களை பகிர்ந்துள்ளார். நேற்று தென் மற்றும் மேற்கு தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை சிறப்பாக இருந்ததாக குறிப்பிட்டுள்ள அவர், குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைக்கு அருகில் உள்ள பகுதிகளில் நல்ல மழை பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். இன்றும் இதேபோன்ற மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், நேற்று இருந்ததைவிட இன்று தென் மற்றும் மேற்கு தமிழகத்தில் சற்று குறைவாக பகுதிகளிலேயே மழை பெய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும், "நேற்று தென்தமிழகம் மற்றும் மேற்கு தமிழகத்திற்கு ஒரு மிக சிறந்த நாள். பல இடங்களில் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மழையை ஒட்டியுள்ள பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இன்றும் தென் மற்றும் மேற்கு தமிழகத்தில், குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு இன்று மழைக்கான வாய்ப்பு தொடர்கிறது. எனினும், அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை இருக்காது. நேற்று இருந்ததை விட மழை சற்று குறையலாம்" என்று பதிவிட்டுள்ளார். அதாவது தென் மற்றும் மேற்கு மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் இன்றும் ஆங்காங்கே மழையை எதிர்பார்க்கலாம். இதற்கிடையே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு இன்னும் மழைக்கான சாதகமான சூழல் உருவாகவில்லையாம். சென்னை உள்ளிட்ட வடகிழக்கு கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வேண்டுமெனில், வங்கக்கடலில் ஒரு சுழற்சி அல்லது தாழ்வுப் பகுதி போன்ற அமைப்பு உருவாக வேண்டும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். அத்தகைய வானிலை அமைப்பு வங்கக்கடலில் உருவாகும் வரை, சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களுக்கு பரவலான மழைக்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். தற்போதைக்கு உள்மாவட்டங்களுக்கே மழையின் நேரம் என்றும், சென்னை மற்றும் கடலோர மாவட்டங்கள் தங்களுக்கான மழை ரவுண்டு தொடங்குவதற்காக காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் இதனால் இன்று தமிழகத்தின் தென் மற்றும் மேற்கு பகுதிகளில் மழை தொடரும் நிலையில், சென்னையில் மழை வர நாம் வங்கக்கடலில் உருவாகும் வானிலை மாற்றங்களை கவனிக்க வேண்டி இருக்கிறது.தமிழ்நாடு வெதர்மேன்
உள்மாவட்டங்கள்
சென்னை மழை
வானிலை சொல்வது என்ன