சென்னையை ஏமாற்றிய காற்றழுத்தம்! நவ.1 வரை தமிழகத்தில் மழை இல்லை! வெதர்மேன் அப்டேட்

  • சென்னை: காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை- புதுவை கடலோர பகுதியில் நிலைக் கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சென்னைக்கு ஏமாற்றத்தை தந்துவிட்டது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், டெல்ட்டா அல்லது வடக்கு இலங்கை கடற்கரையை நோக்கி நகர்ந்துவிட்டது. எனவே தமிழகத்திற்கு நாளை முதல் வறண்ட வானிலை நிலவ வாய்ப்புள்ளது.

    Advertisement

    பொதுவாக மாநிலம் முழுவதும் மழை இடைவெளி விட வாய்ப்புள்ளது. நாகை, திருவாரூர், ராமநாதபுரம், குமரி, தூத்துக்குடி, நெல்லையின் சில பகுதிகள், கடலூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருந்தாலும், மாலை வேளையில் மழைக்கான வாய்ப்பு குறையக் கூடும்.

    இன்று வடஇலங்கையில் மிக கனமழை பெய்யக் கூடும். இந்த தாழ்வு மண்டலம் இதற்கு முன்பு சென்னை- புதுவை கடலோர பகுதியில் நிலை கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அது தெற்கு நோக்கி டெல்ட்டா அல்லது இலங்கை கடலோர பகுதிக்கு இழுக்கப்பட்டு நகர்ந்துவிட்டது.

    இதனால் அந்தப் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ள நிலையில் சென்னைக்கு எதிர்பார்த்த மழை பெய்யவில்லை. நாளை மதியம் முதல் மாநிலம் முழுவதும் வறண்ட வானிலை நிலவக் கூடும். அர்னாப் புயல் கிழக்கு திசைக் காற்றை இழுத்துக் கொண்டு விலகிச் செல்வதால் மழைக்கான வாய்ப்பு தமிழகத்தில் முழுமையாக குறையும் என தெரிவித்துள்ளார்.

    Advertisement

    ரெட்டேரி அல்லது புழல்

    ரெட்டேரியின் மொத்தம் ஆழம் 21.20 அடியாகும். அதில் தற்போது 17.04 அடிக்கு தண்ணீர் இருக்கிறது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3.300 டிஎம்சியாகும். தற்போது 2.415 டிஎம்சி தண்ணீர் இருக்கிறது. வினாடிக்கு 210 கனஅடி நீர் வரத்து வருகிறது. வினாடிக்கு 204 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இங்கு மழையின் அளவு 34 மி.மீ. ஆக பதிவாகியுள்ளது.

    சோழவரம்

    சோழவரம் ஏரியின் மொத்தம் ஆழம் 18.86 அடியாகும். அதில் தற்போது 3.40 அடிக்கு தண்ணீர் இருக்கிறது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 1.081 டிஎம்சியாகும். தற்போது 0.144 டிஎம்சி தண்ணீர் இருக்கிறது. வினாடிக்கு 10 கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. ஆனால் வினாடிக்கு 8 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இங்கு மழையின் அளவு 12 மி.மீ. ஆக பதிவாகியுள்ளது.

    Advertisement

    செம்பரம்பாக்கம்

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்தம் ஆழம் 24 அடியாகும். அதில் தற்போது 14.76 அடிக்கு தண்ணீர் இருக்கிறது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3.645 டிஎம்சியாகும். தற்போது 1.488 டிஎம்சி தண்ணீர் இருக்கிறது. வினாடிக்கு 150 கனஅடி நீர் வரத்து வருகிறது. வினாடிக்கு 208 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இங்கு மழையின் அளவு 4.20 மி.மீ. ஆக பதிவாகியுள்ளது.

    பூண்டி

    பூண்டி ஏரியின் மொத்தம் ஆழம் 35 அடியாகும். அதில் தற்போது 22.90 அடிக்கு தண்ணீர் இருக்கிறது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3.231 டிஎம்சியாகும். தற்போது 0.565 டிஎம்சி தண்ணீர் இருக்கிறது. வினாடிக்கு 490 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. வினாடிக்கு 30 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இங்கு மழை 11 மி.மீ.ராக பதிவாகியுள்ளது.

    Advertisement

    வீராணம்

    வீராணம் ஏரியின் மொத்தம் ஆழம் 15.60 அடியாகும். அதில் தற்போது 13.05 அடிக்கு தண்ணீர் இருக்கிறது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 1.465 டிஎம்சியாகும். தற்போது 0.860 டிஎம்சி தண்ணீர் இருக்கிறது. வினாடிக்கு 2058 கனஅடி நீர் வரத்து வருகிறது. வினாடிக்கு 168 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இங்கு மழையின் அளவு 40 மி.மீ. ஆக பதிவாகியுள்ளது.

    கண்ணன்கோட்டை

    கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியின் மொத்தம் ஆழம் 36.61 அடியாகும். அதில் தற்போது 28.57 அடிக்கு தண்ணீர் இருக்கிறது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 0.500 டிஎம்சியாகும். தற்போது 0.253 டிஎம்சி தண்ணீர் இருக்கிறது. வினாடிக்கு 50 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. வினாடிக்கு 14 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இங்கு கடந்த 24 மணி நேரத்தில் 27 மி.மீ.ராக மழை பதிவாகியுள்ளது.

    Advertisement

    மொத்த கொள்ளளவு

    ஆக, மொத்தம் இந்த 6 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13.222 டிஎம்சி. அதில் 5.725 டிஎம்சி தண்ணீர் இருப்பு இருக்கிறது. அதாவது மொத்த கொள்ளளவில் 43.3 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. மொத்த 6 ஏரிகளில் வினாடிக்கு நீர் வரத்து 2,968 கனஅடியாக உள்ளது. அது போல் வினாடிக்கு 632 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 6 ஏரிகளிலும் பெய்த மழையின் அளவு 128.20 மி.மீ. ஆகும். இவ்வாறு வெதர்மேன் இன்னொரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Tamil nadu Weatherman says that from tomorrow noon, the entire state is likely to turn dry, with rainfall activity dropping to nil, as Cyclone Arnab pulls away the easterly winds along with it.