மேகவெடிப்பு மழை இல்லையா? Cloud burst-க்கு இந்திய வானிலை மையம் வரையறுத்த அளவுகளை பாருங்க! வெதர்மேன்

  • சென்னை: சென்னையில் நேற்று இரவு பெய்தது மேக வெடிப்பு மழையா இல்லையா என்பதை இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ மழை அளவு வரையறைகள் தெளிவாக விளக்குவதாக தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்.

    Advertisement

    வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கி ஆங்காங்கே பெய்து வருகிறது. கடந்த 2 தினங்களாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்கிறது. இத்தனை நாட்களாக வாட்டிய வெயிலுக்கு இந்த மழை குளிர்ச்சியை கொடுத்துள்ளது.

    Advertisement

    இந்த நிலையில் சென்னையில் காலை வேளைகளில் லேசான வெயில் இருந்தாலும் மாலை 5 மணிக்கெல்லாம் இருட்டிக் கொண்டு மழை பெய்யத் தொடங்குகிறது. நேற்றும் அதே போல்தான் காலையில் வெயில் இருந்தது. மாலையில் கருமேகங்கள் சூழத் தொடங்கி மழை கொட்டத் தொடங்கியது.

    அதிலும் மழையின் டார்கெட் வடசென்னை என்பதை போல் அங்குதான் கொட்டித் தீர்த்தது. சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் பாரிமுனையில் 36 செ.மீ., கத்திவாக்கத்தில் 34.4 செ.மீ., மீனம்பாக்கத்தில் 29 செ.மீ., சென்னை சென்ட்ரலில் 27 செ.மீ., சாத்தாங்காட்டில் 26 செ.மீ, திருவொற்றியூரில் 22 செ.மீ., எண்ணூரில் 21 செ.மீ., கார்கில் நகர் 19 செ.மீ., சைதாப்பேட்டை 17 செ.மீ., வடபழனி 16 செ.மீ., நுங்கம்பாக்கம் 15 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

    Advertisement
    2023ம் ஆண்டுக்கு பிறகு சென்னையில் கொட்டி தீர்த்த பெரிய மழை! என்ன நடந்தது நேற்று? வெதர்மேன் விளக்கம்

    மேகவெடிப்பின் காரணமாக சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்ததாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியிருந்தார். ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே வடசென்னையில் 100 மி.மீ அளவுக்கு மேகவெடிப்பு மழை பெய்துள்ளது. கார்கில் நகரில் 109 மி.மீ. மழையும் சாத்தாங்காடு பகுதியில் 106 மி.மீ.மழையும் திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு பகுதியில் 100 மி.மீ. மழையும் பெய்துள்ளது என கூறியிருந்தார்.

    மேகவெடிப்பு என்பது குறைந்த நேரத்தில் அதிக மழைப் பொழிவு ஆகும். அது போல்தான் வடசென்னையிலும் பெய்ததாக வெதர்மேன் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இதை சென்னை வானிலை மையம் மறுத்தது. வானிலை சூழ்நிலைகள், பதிவான மழைப் பொழிவின் தன்மையை பார்க்கும் போது ஒரு சிறிய பகுதியில் மட்டும் ஏற்பட்ட மேகவெடிப்பை விட மேலடுக்கு சுழற்சியுடன் தொடர்புடைய, பரவலான வெப்பச் சலன மேக செயல்பாட்டின் விளைவாகவே மழை பெய்திருக்கலாம் என விளக்கம் அளித்திருந்தது.

    Advertisement

    இதை வைத்து தமிழ்நாடு வெதர்மேனை வியூஸுக்காக ஏன் பொய் சொல்கிறீர்கள் என சமூகவலைதளத்தில் பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் அதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளார்.

    சென்னையில் வெளுத்த மழை! பூண்டி, புழல் ஏரிக்கு நீர்வரத்து எவ்வளவு தெரியுமா? வெதர்மேன் டேட்டா

    அது போல் மேகவெடிப்பு என்றால் எவ்வளவு மழை பெய்திருக்க வேண்டும் என இந்திய வானிலை மையம் வைத்துள்ள வரையறையை விளக்கியுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: லேசான மழை என்றால் மணிக்கு 1 செ.மீ. அளவும் மிதமான மழை என்றால் மணிக்கு 1-2 செ.மீ மழையும் தீவிர மழை என்றால் மணிக்கு 2- 3 செ.மீ. மழையும் மிக தீவிர மழை என்றால் மணிக்கு 3- 5 செ.மீ. மழையும் அதிகபடியான தீவிர மழை என்றால் மணிக்கு 5 முதல் 10 செ.மீ. மழையும் மேகவெடிப்பு என்றால் மணிக்கு 10 செ.மீ. மழைக்கு மேல் பெய்வது என இந்திய வானிலை மையம் வகைப்படுத்தியுள்ளது.

    Advertisement

    மேலும் மேகவெடிப்புகள் என்பவை மிகவும் குறிப்பிட்ட சிறிய பகுதிகளில் மட்டுமே நிகழக் கூடியவை. மிகக் குறுகிய கால அளவைக் கொண்டவை. 20 முதல் 30 சதுர கிமீ பரப்பளவிற்குள் ஒரு மணி நேரத்திற்கு 10 செ.மீ. அல்லது அதற்கு மேற்பட்ட வேகத்தில் மழை பெய்தால் அது மேகவெடிப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் வரையறுத்துள்ளது என குறிப்பிட்டிருந்தது. அதைதான் வெதர்மேன் ஆதாரமாக காட்டியுள்ளார்.

    English Summary

    Tamil nadu Weatherman Pradeep John says that If yesterday event is cloudburst or not ? i leave the observed hourly rainfall data and the IMD definition to speak for themselves.