கண்முன்னே அழியும் விவசாயம்! அடுத்த வருஷமும் குறுவை சாகுபடி நடக்காது! வெதர்மேன் சொன்ன உண்மை!

  • சென்னை: இந்த ஆண்டு உருவாகியிருக்கும் எல்-நினோ பாதிப்பு, அடுத்த ஆண்டும் எதிரொலிக்கும் என்றும், குறிப்பாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்திருப்பதால் குறுவை சாகுபடி பாதிக்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.

    Advertisement

    இது குறித்து அவர் தனது x பக்கத்தில், "எல் நினோ காலகட்டங்களில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை மிக கடுமையாக பாதிக்கப்படும். இதுதான் பேட்டன். இது இந்த ஆண்டும் தொடர்கிறது. கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், கடந்த 2 எல் நினோ ஆண்டுகளை விட இந்த ஆண்டு நிலைமை மோசமாகியிருக்கிறது என்பதுதான்.

    Advertisement

    தென் கர்நாடகாவின் உட்பகுதி

    காவிரி ஆற்றின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக விளங்கும் இப்பகுதியில், எல் நினோ தாக்கத்தால் மழைப்பொழிவு ஒவ்வொரு ஆண்டும் சரிந்து வருகிறது.

    2015ல் இயல்பான மழையை விட 8% அளவுக்கு மழை குறைந்தது
    2023ல் நிலைமை மோசமடைந்து 28% அளவுக்கு மழை குறைந்தது
    2023ல் இது 36% என்கிற அளவுக்கு குறைந்துள்ளது.

    கேரளாவின் நிலவரம்

    காவிரியின் உபநதிகளுக்கு நீர் வழங்கும் முக்கிய பகுதியான கேரளாவிலும் தென்மேற்கு பருவமழை கடுமையாக குறைந்திருக்கிறது.

    2015ல் இயல்பான மழையைவிட 26% அளவுக்கு மழை குறைந்தது
    2023ல் மிக மோசமாக 34% வரை மழை குறைந்தது
    2026ல் இந்த ஆண்டும் 28% வரை மழை குறைந்தது

    Advertisement

    தமிழ்நாடு நீலகிரியில் பாதிப்பு

    தமிழகத்தின் முக்கிய நீர்ப்பிடிப்பு மாவட்டமான நீலகிரியிலும் 32% அளவுக்கு மழை பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இப்படி எல்லா இடங்களிலும் மழை பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால் அதன் தாக்கம் 2027ம் ஆண்டும் எதிரொலிக்கும். குறிப்பாக அடுத்த ஆண்டு தொடக்கத்தில்.. கோடைக்காலத்தில் பாதிப்பு தீவிரமாக இருக்கும்" என்று தெரிவித்திருக்கிறார்.

    காவிரி படுகை மற்றும் பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களில் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக சரிந்து, கோடையில் குடிநீர் தட்டுப்பாடு தீவிரமடையலாம். மேட்டூர் அணை மற்றும் கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ் போன்ற முக்கிய அணைகளில் நீர் இருப்பு மிக குறைவாக இருப்பதால்.. குறுவை, சம்பா போன்ற விவசாய சாகுபடிகள் மற்றும் பயிர் விளைச்சல் பெருமளவில் பாதிக்கப்படும்.

    Advertisement

    கேரளாவின் இடுக்கி, வயநாடு போன்ற பகுதிகளில் மழை குறைந்திருப்பதால் நீர்மின் உற்பத்தி சரிவடைந்து மின்சார விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படலாம் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

    English Summary

    Weatherman Pradeep John has warned that the impact of this year's El Niño will persist into next year and that *Kuruvai* cultivation will be affected, particularly due to reduced rainfall in the Cauvery catchment areas.