முரசு புயலால் தமிழகத்திற்கு பாதிப்பா? சென்னை மக்களின் கவனத்திற்கு.. வெதர்மேன் சொன்ன மேட்டர்!

  • சென்னை: வங்கக்கடலில் உருவாகும் முரசு புயலால் சென்னைக்கு பாதிப்பு இருக்குமா? தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யுமா? என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கமளித்துள்ளார்.

    Advertisement

    இது குறித்து அவர் தனது x பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, "வங்கக்கடலில் தற்போது முரசு புயல் உருவாகி வருகிறது. இது வலுப்பெறும்போது.. தெற்கு மற்றும் மத்திய ஆந்திரப் பிரதேச பகுதிகளில்தான் அதிகனமழை பெய்யும்.

    Advertisement

    இந்த புயல் ஆந்திராவை நோக்கிதான் நகர்கிறது. எனவே, நமக்கு பெரிய அளவுக்கு பாதிப்பு இல்லை. சென்னை மற்றும் திருவள்ளூரை பொறுத்தவரை, இது ஆந்திரக் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ளதால், இந்த மாவட்டங்களில் நவம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, பொன்னேரி - கும்மிடிப்பூண்டி - பழவேற்காடு பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

    வட தமிழகத்தின் பிற பகுதிகளை பொறுத்தவரை, புயல் அமைப்பின் ஈர்ப்பு காரணமாக, நவம்பர் 2 மற்றும் 3 தேதிகளில் வட தமிழகத்தின் பிற பகுதிகளிலும் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளது. உட்புற மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

    Advertisement

    ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், அதிக மழைப்பொழிவு தெற்கு மற்றும் மத்திய ஆந்திரக் கடற்கரைப் பகுதிகளில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், வட தமிழகத்தில், குறிப்பாக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிதமான மழை மட்டுமே பெய்யக்கூடும்" என்று தெரிவித்திருக்கிறார்.

    English Summary

    Weatherman Pradeep John has provided an explanation regarding whether the 'Murasu' cyclone, forming in the Bay of Bengal, will impact Chennai, and whether rainfall can be expected in the coastal districts of Tamil Nadu.