வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவாகும் 3 புயல்கள்! சென்னைக்கு சம்பவம் இருக்கு! வெதர்மேன் கணிப்பு

  • சென்னை: இந்த ஆண்டு சூப்பர் எல் நினோ ஆண்டாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, எதிர்பார்க்க முடியாத, கணிக்க முடியாத வானிலை சூழல் உருவாகும் என்றும் என்றும், குறிப்பாக வங்கக்கடலில் 3 புயல்கள் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

    Advertisement

    தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் குழுவினரால், இந்த ஆண்டு பருவமழை எப்படி இருக்கும் என்பது குறித்து Chennai Rains வெப்சைட்டில் விரிவாக எழுதப்பட்டிருக்கிறது.

    Advertisement

    இந்த கட்டுரைக்கு அவர்கள் 'MEM 2026 கணிக்க முடியாத ஆண்டு' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். வானிலை மாதிரிகள் மற்றும் பசிபிக் பெருங்கடல் நகர்வுகள் வழக்கத்திற்கு மாறான முரண்பாடுகளை காட்டுவதால், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை துல்லியமாக கணிக்க முடியாமல் புதிர் நிறைந்த ஆண்டாக உள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். இதற்கு பல காரணங்களை அவர்கள் பட்டியலிட்டிருக்கின்றனர்.

    முதல் காரணம் எல் நினோ நீட்டிப்பு. பசிபிக் பெருங்கடலில் நடக்கும் வெப்பநிலை மாற்றம்தான் எல் நினோ என்று சொல்லப்படுகிறது. அங்க என்ன நடந்தா நமக்கு என்ன? என்று பொத்தாம் பொதுவாக கடந்து போய்விட முடியாது. காரணம் இந்த வெப்பநிலை மாற்றம் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பருவநிலை மாற்றத்தை ஏற்படுத்தும்.

    Advertisement

    சரி இப்போது விஷயத்திற்கு வருவோம். பொதுவாக எல் நினோ நிலவும் ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு, குறிப்பாக சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கு நல்ல வடகிழக்கு பருவமழை கிடைக்கும். இதற்கு முன்னர் இப்படித்தான் நடந்திருக்கிறது. ஆனால், 2026ல் இந்த எல் நினோ விளைவு வழக்கமான சுழற்சியை மீறி வடகிழக்கு பருவமழை காலத்திலும் தொடர்ந்து நீடிக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இது சாதகமான மழையை தருமா? அல்லது பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் மாற்றங்களால் மழையை குறைக்குமா? என்று சரியாக கணிக்க முடியவில்லை.

    MJO சலனம்

    ஏன் இப்படி கணிக்க முடியவில்லை? என்பதற்கு காரணம்.. இந்தியப் பெருங்கடலில் இருந்து பசிபிக் பெருங்கடலை நோக்கி நகர வேண்டிய எம்.ஜே.ஓ காற்று அலைகள்.. இன்னும் நகராமல் அப்படியே ஸ்டக்காகி இருக்கிறது. இது ஆகஸ்ட்/செப்டம்பர் மாதங்களில் மீண்டும், மீண்டும் பசிபிக் பகுதியிலேயே தேங்குவதால் இந்திய பெருங்கடல் மற்றும் வங்கக்கடலில் வலுவான காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாவதில் தாமதமோ அல்லது சிக்கலோ ஏற்படலாம்.

    Advertisement

    இஸ்ரோ மற்றும் பிற சர்வதேச வானிலை அமைப்புகளின் தற்போதைய மதிப்பீடுகளின்படி, இந்த அக்டோபர்-டிசம்பர் பருவமழை காலத்தில் வட இந்திய பெருங்கடல் மற்றும் வங்கக்கடலில் சுமார் 3 புயல்கள் உருவாக வாய்ப்பு இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    எனவே சென்னையை பொறுத்தவரை நவம்பர் மாதம்தான் அதிகப்படியான மழையை பெறும் மாதமாக இருக்கும். அதுவும் கூட சீரான மழையாக இல்லாமல்.. திடீரென கொட்டி தீர்க்கும் மழையாக இருக்கும். ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை.. மொத்தமாக ஒரே நாளில் பெய்துவிடும். இதனால் வெள்ள அபாயங்கள் ஏற்படலாம். எனவே உட்கட்டமைப்புகளை முடிந்த அளவுக்கு ரெடியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று இந்த கட்டுரையில் எச்சரிக்கப்பட்டிருக்கிறது.

    English Summary

    Weatherman: This year has been declared a 'Super El Niño' year. Consequently, private meteorologists predict the emergence of unpredictable weather conditions and, specifically, the likelihood of three cyclones forming in the Bay of Bengal.