Chennai: Sun- Rain, வெயில்- மழை! இன்னிக்கு பூரா இந்த பேட்டர்ன்தான்! வெதர்மேன் சொன்ன முக்கிய அப்டேட்!

  • சென்னை: சென்னையில் வெயில்- மழை, வெயில்- மழை என மாறி மாறி வானிலை இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும் சென்னைக்கு குடிநீர் சப்ளை செய்யும் ஏரிகளின் கொள்ளளவு குறித்தும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதாவது வெயில்- மழை, வெயில்- மழை என பகல் நேரத்தில் இந்த பேட்டர்ன்தான் இருக்கும். வளி மண்டல மேலடுக்கு சுழற்சி வலுவிழந்த நிலையில் தற்போது மழை பெய்து வருகிறது.

    Advertisement

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நாளை மொத்தமாக 5 டிஎம்சி கொள்ளளவை தாண்டும். அக்டோபர் 25 ஆம் தேதி அந்த ஏரிகளின் மொத்த கொள்ளளவு 6 டிஎம்சியாக இருக்கும் வகையில் மழை பெய்தால் நல்லது. அடுத்த 2 முதல் 3 நாட்களில் ஏரிகளுக்கான நீர் வரத்து அதிகரிக்க வேண்டும் என கூறியுள்ள வெதர்மேன், 6 ஏரிகளின் நிலை குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

    ரெட்டேரி அல்லது புழல்

    ரெட்டேரியின் மொத்தம் ஆழம் 21.20 அடியாகும். அதில் தற்போது 15.70 அடிக்கு தண்ணீர் இருக்கிறது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3.300 டிஎம்சியாகும். தற்போது 2,167 டிஎம்சி தண்ணீர் இருக்கிறது. வினாடிக்கு 775 கனஅடி நீர் வரத்து வருகிறது. வினாடிக்கு 197 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இங்கு மழையின் அளவு 2 மி.மீ. ஆக பதிவாகியுள்ளது.

    Advertisement

    சோழவரம்

    சோழவரம் ஏரியின் மொத்தம் ஆழம் 18.86 அடியாகும். அதில் தற்போது 3.07 அடிக்கு தண்ணீர் இருக்கிறது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 1.081 டிஎம்சியாகும். தற்போது 0.134 டிஎம்சி தண்ணீர் இருக்கிறது. வினாடிக்கு 10 கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. ஆனால் வினாடிக்கு 8 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இங்கு மழையின் அளவு 6 மி.மீ. ஆக பதிவாகியுள்ளது.

    செம்பரம்பாக்கம்

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்தம் ஆழம் 24 அடியாகும். அதில் தற்போது 14.29 அடிக்கு தண்ணீர் இருக்கிறது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 டிஎம்சியாகும். தற்போது 1,404 டிஎம்சி தண்ணீர் இருக்கிறது. வினாடிக்கு 210 கனஅடி நீர் வரத்து வருகிறது. வினாடிக்கு 188 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இங்கு மழையின் அளவு 2 மி.மீ. ஆக பதிவாகியுள்ளது.

    Advertisement

    பூண்டி

    பூண்டி ஏரியின் மொத்தம் ஆழம் 35 அடியாகும். அதில் தற்போது 21.89 அடிக்கு தண்ணீர் இருக்கிறது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3.231 டிஎம்சியாகும். தற்போது 0.443 டிஎம்சி தண்ணீர் இருக்கிறது. வினாடிக்கு 420 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. வினாடிக்கு 230 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இங்கு மழை பொழிவு இல்லை.

    வீராணம்

    வீராணம் ஏரியின் மொத்தம் ஆழம் 15.60 அடியாகும். அதில் தற்போது 11.66 அடிக்கு தண்ணீர் இருக்கிறது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 1.465 டிஎம்சியாகும். தற்போது 0.599 டிஎம்சி தண்ணீர் இருக்கிறது. வினாடிக்கு 340 கனஅடி நீர் வரத்து வருகிறது. வினாடிக்கு 118 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இங்கு மழையின் அளவு 4 மி.மீ. ஆக பதிவாகியுள்ளது.

    Advertisement

    கண்ணன்கோட்டை

    கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியின் மொத்தம் ஆழம் 36.61 அடியாகும். அதில் தற்போது 27.81 அடிக்கு தண்ணீர் இருக்கிறது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 0.500 டிஎம்சியாகும். தற்போது 0.232 டிஎம்சி தண்ணீர் இருக்கிறது. வினாடிக்கு 20 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. வினாடிக்கு 19 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இங்கும் கடந்த 24 மணி நேரத்தில் மழை பெய்யவில்லை.

    மொத்த கொள்ளளவு

    ஆக, மொத்தம் இந்த 6 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13.222 டிஎம்சி. அதில் 4.979 டிஎம்சி தண்ணீர் இருப்பு இருக்கிறது. அதாவது மொத்த கொள்ளளவில் 37.6 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. மொத்த 6 ஏரிகளில் வினாடிக்கு நீர் வரத்து 1,775 கனஅடியாக உள்ளது. அது போல் வினாடிக்கு 759 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 6 ஏரிகளிலும் பெய்த மழையின் அளவு 12 மி.மீ. ஆகும். இவ்வாறு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Tamil nadu weatherman says that Very good rain in most parts of Chennai today. There will be sunny climate also.