சென்னையை சுற்றி மழை மேகங்கள்! இன்று இரவும் மழை இருக்கு! ஆனாலும் குட் நியூஸ் சொன்ன வெதர்மேன்

  • சென்னை: சென்னையில் நேற்றைய தினம் இரவு கனமழை தொடங்கி விடிய விடிய கொட்டித் தீர்த்த நிலையில் இன்று சென்னை உள்பட 4 மாவட்டங்களிலும் மழை நிலவரம் எப்படி இருக்கும் என்பதை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கியுள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.

    Advertisement

    காலை வேளைகளில் சென்னைக்கு மேலே இருக்கும் மழை மேகங்கள் அப்படியே வடக்கு நோக்கி நகர்ந்து பொன்னேரி- பழவேற்காடு பகுதிக்கு செல்லும். சென்னையில் காலையில் சூரியன் வரலாம், ஆனால் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இன்று இரவும் மழை

    இன்றும் இரவு முதல் நாளை காலை வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஒரு நல்ல விஷயமும் இருக்கிறது. நேற்றைய இரவு பெய்தது போல் இன்று இரவும் அதே வீரியத்துடன் பெய்யாது. மிதமான முதல் கனமழை வரை பெய்யக் கூடும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Advertisement
    சென்னை உட்பட மொத்தம் 22 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை! வானிலை மையம் வார்னிங்!

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி தொடங்கியது. இதனால் கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கனமழை வெளுத்தது. அது போல் நேற்று இரவு தொடங்கிய கனமழை விடிய விடிய பெய்து தீர்த்தது. இரவு நேரத்தில் இடியும், மின்னல்களும் என மிரட்டியது.

    எங்கெல்லாம் மழை?

    சென்னையில் முகப்பேர், அண்ணாநகர், அம்பத்தூர், கோயம்பேடு, கிண்டி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், திருவொற்றியூர், பாரிமுனை, பிராட்வே உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்தது. அது போல் புறநகர் பகுதிகள், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்தது.

    Advertisement
    அதிகாலை வந்த முக்கிய அலர்ட்.. சென்னை, செங்கல்பட்டு உட்பட 16 மாவட்டங்களில் மழை வெளுக்கும்

    இதனால் சென்னை உள்பட 5 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. கடந்த சனிக்கிழமை முதல் 4 நாட்கள் ஆயுத பூஜை விடுமுறை முடிந்து மக்கள் சென்னைக்கு திரும்பி வரும் நிலையில் கனமழை கொட்டித் தீர்ப்பதால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகிறார்கள்.

    இலங்கை அருகே தெற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாகியுள்ளதால் வடதமிழக கடலோர மாவட்டங்களில் மழை அதிகரிக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

    வானிலை மையம் அலர்ட்

    இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நேற்று சிவகங்கை மாவட்டம், அமராவதி புதூர், பேராட்டுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டம் மங்களக்குடி பகுதிகளில் தலா 9 செ.மீ. மழை பெய்துள்ளது.

    Advertisement

    இதற்கு அடுத்தபடியாக ராமநாதபுரம் மாவட்டம் திருவாடாணை, நாகை மாவட்டம் தலைஞாயிறு, திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் ஆகிய இடங்களில் தலா 8 செ.மீ. மழை பெய்துள்ளது.

    விவசாயிகளுக்கு நஷ்டம்

    இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தென்காசியில் பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த தென்னை மரங்கள் முறிந்து விழுந்ததால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    Tamil nadu Weatherman Pradeep John updates about the rain in Kanchipura, Tiruvallur, Chennai and Chengleput districts.