சன்டே அதுவுமா ரெட் அலர்ட் வார்னிங் கொடுத்துவிட்டு வாபஸ் பெற்றது ஏன்? வானிலை மையம் விளக்கம்

  • சென்னை: சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துவிட்டு பின்னர் வாபஸ் வாங்கியது ஏன் என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் துரை விளக்கமளித்துள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது: நேற்றைய தினம் வடதமிழகத்தில் வளிமண்டல சுழற்சி நிலவியது. இதன் தாக்கத்தால் சென்னை மற்றும் வடதமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்தது. சென்னையில் அதிக கனமழை பெய்தது.

    Advertisement

    அதிகபட்சமாக எம்ஜிஆர் நகரில் 15 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அது போல் காஞ்சிபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்துள்ளது. நேற்றைய தினம் தமிழக கடற்கரை பகுதிகளுக்கு மிக கனமழை எச்சரிக்கை கொடுத்திருந்தோம். உள்மாவட்டங்களுக்கும் டெல்டா மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை கொடுத்திருந்தோம்.

    மிக கனமழை

    நாங்கள் கொடுத்தது போல் அநேக மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்தது. வடகிழக்கு பருவமழையை பொருத்தமட்டில் கடந்த 24 மணி நேரத்தில் வலிமையாக காணப்படுகிறது. அதிக மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பதிவாகியுள்ளது.

    பல்வேறு மாவட்டங்களில் மழை

    இந்த கனமழை வரும் 26 ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை தொடர வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று காலை 5.30 மணிக்கு தெற்கு கடலோரம் மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் அடுத்த 6 நாட்களுக்கு தென் தமிழக பகுதிகளில் அநேக இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

    Advertisement

    தென் தமிழகம்

    குறிப்பாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அது போல் நாளை ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

    TN Rain Alert: வெளுத்து வாங்கப் போகுது பேய் மழை.. 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்! தமிழகம் முழுவதும் குட்நியூஸ்!

    தமிழக கடற்கரை பகுதி

    இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தமிழக கடற்கரைக்கு பக்கத்தில் உருவாகியுள்ளது. இதன் வலிமை அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. இது ஓரிரு நாட்களில் வலிமையை இழக்க நேரிடும். அநேக மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும். இது புயலாக மாற வாய்ப்பில்லை.

    Advertisement

    காற்றழுத்த தாழ்வு பகுதி

    23 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அது உருவாகி மேற்கு வட மேற்கு திசையில் நகரும். அதே சமயம் அது வலிமையாகி புயலாக மாற வாய்ப்புள்ளது. எனினும் அதன் நகர்வு, வலிமை உள்ளிட்டவை குறித்து அவ்வபோது அப்டேட் கொடுக்கிறோம்.

    மழைக்கான வாய்ப்பு

    இன்று உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத்தினால் அடுத்த ஒரு வாரத்திற்கு மழைக்கான வாய்ப்புள்ளது என்றார். அப்போது அவரிடம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ரெட் அலர்ட் கொடுத்துவிட்டு பிறகு ஏன் வாபஸ் பெற்றீர்கள் என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    Advertisement

    ரெட் அலர்ட் எச்சரிக்கை ஏன்?

    அதற்கு துரை, "ரெட் அலர்ட்டை பொருத்தமட்டில் முதல்நாள் அதி கனமழை இருந்தால் அடுத்தநாள் கனமழையை எதிர்பார்த்து ரெட் அலர்ட் கொடுப்பதுதான் நமது நிலையான வழிகாட்டுதல் நெறிமுறையாகும் (SOP).

    ரெட் அலர்ட் வாபஸ் ஏன்?

    அது போல்தான் சனிக்கிழமை இரவு பெய்த மிக கனமழையால் ஞாயிற்றுக்கிழமை அன்று கனமழை பெய்யும் என கருதி ரெட் அலர்ட் கொடுத்திருந்தோம். ஆனால் வடதமிழகம், தெற்கு ஆந்திர பகுதியில் நிலவிய வளி மண்டல மேலடுக்கு சுழற்சி வலுவிழந்ததால் நாங்கள் எதிர்பார்த்தது போல் கனமழைக்கான வாய்ப்பு இல்லை. அதனால் ரெட் அலர்ட்டை வாபஸ் வாங்கிவிட்டோம். இவ்வாறு துரை தெரிவித்தார்.

    English Summary

    IMD Director Durai explains why the IMD withdraw red alert warning given on last sunday?